14 மணி நேர பேட்டரி ஆயுளோடு 50w கொண்ட MI AirDots pro 2 Power Bank அறிமுகம்!

14 மணி நேர பேட்டரி ஆயுளோடு 50w கொண்ட MI AirDots  pro 2 Power Bank அறிமுகம்!

MI AirDots Pro   2, MI Power Bank 3 50W, 30W MI  சார்ஜ் டர்போ வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டாண்டின்  விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்

ஹைலைட்ஸ்
  • Mi AirDots Pro 2, 14.2mm டிரைவர்ஸுடன் வருகிறது
  • பவர் பேங்கில் 20,000mAh திறன் கொண்ட பேட்டரி உள்ளது
  • Mi Power Bank 3, மூலம் ஒரே நேரத்தில் 3 சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும்
விளம்பரம்

Xiaomi செவ்வாய்கிழமை தனது சீன நிகழ்வில் MI AirDots pro 22 ஐ அறிமுகப்படுத்தியது. MI Power Bank 3 50W ஃபாஸ்ட் சார்ஜ் மாடல் மற்றும் 30W  MI சார்ஜ் டர்போ வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டாண்டு ஆகியவற்றுடன், இந்நிகழ்வில், Mi 9 Pro 5G, Mi TV Pro 8K, மற்றும் Mi Mix Alpha 5G ஆகியவை அறிவிக்கப்பட்டன. 

Mi AirDots Pro 2 earbuds புளூடூத் 5, 14.2 mm drive மற்றும் ENC-க்கான இரட்டை மைக்ரோஃபோன்களை ஆதரிக்கிறது. MI Power Bank 3 50W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது, 20,000 mAh திறன்கொண்ட பேட்டரியை பேக் செய்கிறது. 30W MI சார்ஜ் டர்போ வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டாண்டு வேகமான மற்றும் பாதுகாப்பான வெப்பச் சிதறலுக்கான புதிய காற்று குழாய் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.

MI AirDots  Pro 2, MI Power Bank 3 50W, 30W Mi சார்ஜ் டர்போ வயர்லெஸ் சார்ஜிங் விலை

இயர்பட்ஸிலிருந்து தொடங்கி, MI AirDots  pro 2 சீனாவில் CNY 399 (தோராயமாக ரூ .4,000)  என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, மேலும், இது செப்டம்பர் 27 முதல் விற்பனைக்கு வர உள்ளது. earbuds  ஒற்றை வெள்ளை வண்ண நிறத்தில் கிடைக்கும். மறுபுறம், MI Power Bank 3 50W சீனாவில் CNY  299 (தோராயமாக ரூ .3,000) என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய 50W Power Bank  எப்போது விற்பனைக்கு வரும் என்பதில் தெளிவு இல்லை.

30W  MI சார்ஜ் டர்போ வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டாண்டில் சீனாவில் CNY  199 (தோராயமாக ரூ .2,000) என்று  விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது ஒற்றைவெள்ளை வண்ண நிறத்தில் வருகிறது. ஆனால், எப்போது விற்பனைக்கு வரும் என்பதில் எந்த தகவலும் இல்லை.

MI AirDots Pro 2, MI Power Bank 3 50W, 30W MI  சார்ஜ் டர்போ வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டாண்டின்  விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்கள்

இந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட  Mi AirDots Pro 2, ஆப்பிள் ஏர்போட்ஸ் தொடரிலிருந்து பெரிதும் ஈர்க்கப்பட்டு, வெள்ளை சார்ஜிங்குடன் வெளிவருகிறது. அவை உங்கள் காதில் எளிதில் பொருத்துவதற்கும், விழாமல் தடுப்பதற்கும் semi-in-ear bud வடிவமைப்பைக் கொண்டுள்ளன. 

புளூடூத் v 5.0 மற்றும் LDHC Hi-Res audio codec ஐ earbuds ஆதரிக்கின்றன. இது குரல் கட்டுப்பாடு மற்றும் சத்தம் ரத்துசெய்யும் அம்சங்களை வழங்கும் இரட்டை மைக்ரோஃபோன்களுடன் வருகிறது. ஒருங்கிணைந்த சென்சார் உள்ளதால் இது Mi AirDots Pro 2 வின் earbud அகற்றும்போது அடையாளம் காண உதவுகிறது. ஆடியோவை அகற்றும்போதெல்லாம் தானாக இடைநிறுத்த இது உதவுகிறது.

mipowerbank350w main Mi Power Bank 3 50W

Mi பவர் பேங்க் 3 50W
Photo Credit: Weibo

volume  மற்றும் Track  changeகளுக்கு தொடு கட்டுப்பாடுகளும் உள்ளதோடு, 14.2 mm  இயக்கிகளையும் கொண்டுள்ளன. அவை அண்ட்ராய்டு மற்றும் iOS சாதனங்களுடன் இணைக்க முடியும். மேலும் ஒவ்வொரு buds -ம்  4.5 கிராம் எடை இருக்கும். case  weight  சுமார் 50 கிராம். பேட்டரி ஆயுளைப் பொறுத்தவரை, Mi AirDots Pro 2, 4 மணிநேர முழுமையான பிளேபேக்குடனும், 14 மணிநேரம் case உடனும் நீடிக்கும். இது USB Type-C சார்ஜிங்கை ஆதரிக்கிறது. மேலும் case-ஐ  சார்ஜ் செய்ய ஒரு மணி நேரம் ஆகும்.

குறிப்பிட்டுள்ளபடி, MI Power  bank  3, 50W ஐ  50W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது 20,000 mAh  திறன் கொண்ட பேட்டரியுடன் வருவதோடு  Xiaomi  சூப்பர் ஃபிளாஷ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது இரண்டு USB TYpe -A  போர்ட்களையும், ஒரு USB Type  - C  போர்ட்டையும்  மூன்று சாதனங்களை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்ய அனுமதிக்கிறது. இது மேட் கருப்பு பூச்சுடன் வருகிறது, மேலும் கடந்த கால Mi  Power  Banks போல  உருளை வடிவமைப்பை  கொண்டுள்ளது.

miwirelesschargingstand main 30W Mi Charge Turbo wireless charging stand

30W Mi Charge Turbo wireless charging stand
Photo Credit: Weibo

இறுதியாக, புதிய 30W MI சார்ஜ் டர்போ வயர்லெஸ் சார்ஜிங் ஸ்டாண்டில் பணிச்சூழலியல் செங்குத்து சாய் வடிவமைப்பு சட்டகம் உள்ளது, அதே நேரத்தில் திரையை மேல்நோக்கி வைக்கும் போது, பூண் ஓய்வு நிலையை அடைகிறது. இது Qi  சார்ஜிங் தரத்துடன் ஒத்துப்போகிறது. மேலும்  உட்புறத்தை  குளிர்ச்சியாக வைத்திருக்க விசிறியுடன் வருகிறது. இது வேகமான மற்றும் பாதுகாப்பான வெப்பச் சிதறலுக்கான புதிய காற்று குழாய் வடிவமைப்பையும் கொண்டுள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »