Photo Credit: Weibo
ஹவாய் நிறுவனத்தின் இரண்டு புதிய சாதனங்கள் ஏப்ரல் 8-ஆம் தேதி சீனாவில் வெளியாகிறது. புதிய ஹவாய் விஷன் ஸ்மார்ட் டிவி (பாப்-அப் கேமராவுடன்) மற்றும் ஹவாய் பி 40 சீரிஸ். ஸ்மார்ட் டிவி குறித்த எந்த விவரத்தையும் ஹவாய் வெளியிடவில்லை.
Huawei விஷன் ஸ்மார்ட் டிவியின் பாப்-அப் கேமரா பெரியதாக இருப்பதை படத்தில் காணலாம். இந்த பாப் கேமரா, 75 அங்குல விஷன் ஸ்மார்ட் டிவியில் இருந்தது குறிப்பிடத்தக்கது. டிவியின் சமீபத்திய பதிப்பில் பெரிய டிஸ்பிளேவை எதிர்பார்க்கலாம். ஹவாய் விஷன் ஸ்மார்ட் டிவி இந்தியாவுக்கு வருமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
Huawei Smart Screen V75, குவாண்டம் டாட் அல்ட்ரா எச்டி (3840 x 2160 பிக்சல்கள்) டிஸ்பிளேவுடன் 2019 நவம்பரில் வெளியானது. பாப்-அப் கேமரா, 10 டிகிரி கோணத்தில் மிகவும் உகந்த வீடியோ சேட் அனுபவத்தை வழங்கியது.
ஹவாய் ஸ்மார்ட் ஸ்கிரீன் வி 75 ப்ளாக் மற்றும் கோல்டு கலர் ஆப்ஷன்களிலும் வந்தது. ஸ்மார்ட் டிவியின் விலை சிஎன்ஒய் 12,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,30,000) ஆகும். டிவியைப் பற்றிய கூடுதல் விவரங்களை வெளியீட்டின்போது தெரிந்துகொள்வோம்.
ஸ்மார்ட் டிவி வெளியாகும் அதே நாளில், Huawei P40 5G, Huawei P40 Pro 5G மற்றும் Huawei P40 Pro+ 5G ஆகியவை விற்பனைக்கு வருகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்