Bluetooth சான்றிதழ் பெற்ற ஜியோமி சாதனங்கள்! 

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 14 டிசம்பர் 2019 12:16 IST
ஹைலைட்ஸ்
  • Mi True Wireless Earphones 2S, Bluetooth SIG தளத்தில் வெளிவந்துள்ளது
  • ஜியோமி செப்டம்பர் மாதம் Mi True Wireless Earphones-ஐக் கொண்டுவந்தது
  • Mi True Wireless Earphones 2S, 1More தயாரிப்பாளரால் உருவாக்கப்பட்டது

Mi True Wireless Earphones அல்லது Mi AirDots Pro 2 விரைவில் மேம்படுத்தலைப் பெற வாய்ப்புள்ளது

ஜியோமி தயாரிப்புகளில் ஒரு புதிய truly wireless earbuds-ஐக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. நிறுவனம் இன்னும் அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், புதிய இயர்பட்ஸ் Bluetooth SIG இணையதளத்தில் மாதிரி எண் TWSEJ05WM உடன் வெளிவந்துள்ளன. Mi True Wireless Earphones 2S என்ற தயாரிப்பு பெயருடன் ஆன்லைனில் இயர்பட்ஸ் பட்டியலிடப்பட்டுள்ளன, இது சீனாவில் Mi AirDots Pro 2 எனக் கிடைக்கும் Mi True Wireless Earphones-க்கான மேம்படுத்தலாகத் தோன்றுகிறது. விருப்பமான வயர்லெஸ் சார்ஜிங்-ஆதரவு கேசுடன் வரும் Apple AirPods 2-ஐ எதிர்கொள்ள, ஜியோமி வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் புதிய இயர்பட்களைக் கொண்டுவர வாய்ப்புள்ளது.

புளூடூத் சான்றிதழ் இணையதளத்தில் கிடைக்கும் விவரங்களின்படி, ஜியோமியிலிருந்து வரும் Mi True Wireless Earphones 2S, Bluetooth v5.0 இணைப்புடன் வருகிறது. இயர்பட்ஸ் மாதிரி எண் TWSEJ05WM-ஐக் கொண்டுள்ளன, இது செப்டம்பர் மாதத்தில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Mi AirDots Pro 2 அல்லது Mi True Wireless Earphone உடன் தொடர்புடைய மாதிரி எண்ணான TWSEJ02JY உடன் நெருக்கமாகத் தெரிகிறது.

ஆன்லைன் பட்டியல் Tiinlab.com.cn-ஐ தயாரிப்பு வலைத்தளமாகக் காட்டுகிறது. 1More பிராண்டின் கீழ் ஹெட்ஃபோன்கள் மற்றும் பிற ஆடியோ சாதனங்களை தயாரிக்கும் சீன ஒலியியல் உற்பத்தியாளர் டைன்லாப் (TiinLab) என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோமி தனது next-generation truly wireless earbuds-ஐ தயாரிப்பதற்காக ஷென்சென் சார்ந்த நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இருக்கலாம்.

Xiaomi Mi Wireless Earphones 2S டிசம்பர் 12 முதல் Bluetooth SIG இணையதளத்தில் பட்டியலிடப்படுள்ளது
Photo Credit: Bluetooth SIG

Mi True Wireless Earphones 2S அறிமுகம் குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், Bluetooth SIG வலைத்தளத்தின் சான்றிதழ் பக்கம், டிசம்பர் 12 அன்று இயர்பட்ஸ் பட்டியலிடப்பட்டிருப்பதைக் காட்டுகிறது. நிறுவனம் விரைவில் தங்கள் முறையான அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று அறிவுறுத்துகிறது.

Mi True Wireless Earphones 2S-ல் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவை உள்ளடக்கியிருக்கலாம். மேலும், AirPods 2-ஐ எடுத்துக்கொள்வதற்கான புதிய வடிவமைப்பில் வரக்கூடும். மேலும், உள்நாட்டு போட்டியாளரும் அதன் முதல் truly wireless earbuds-ல் பணிபுரியும் நிலையில், ஜியோமி ரியல்மி விஷயங்களை கடினமாக்குகிறது. டிசம்பர் 17, செவ்வாயன்று இந்தியாவில் Realme Buds Air என அறிமுகம் செய்யவுள்ளது.

Advertisement

Mi True Wireless Earphones 2S-ன் ஆன்லைன் பட்டியலை GizmoChina கண்டுபிடித்தது. இருப்பினும், கேஜெட்ஸ் 360 அதன் இருப்பை சுயாதீனமாக சரிபார்க்க முடிந்தது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Fab Grab Fest 2025: Galaxy S25, Galaxy Z Fold7 முதல் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வரை - அதிரடி சலுகை
  2. Amazon-ல் Tablet வாங்க இதுதான் சரியான நேரம்! iPad, Samsung, OnePlus டேப்லெட்டுகளுக்கு அதிரடி சலுகைகள்
  3. Amazon Great Indian Festival 2025: Samsung, Xiaomi, LG ஸ்மார்ட் டிவி-களுக்கு அதிரடி விலைக் குறைப்பு
  4. Amazon vs Flipkart: Samsung Galaxy S24 Ultra மற்றும் iPhone 16 Pro-வுக்கு மிகப்பெரிய விலைக் குறைப்பு! எது வாங்கலாம்?
  5. Vivo X300 series போன் வெளியீட்டு தேதி உறுதியாகிடுச்சு! ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
  6. Samsung ஃபோன் வாங்கலாமா? Amazon Great Indian Festival Sale 2025-ல Galaxy S24 Ultra, Z Fold 6 உட்பட பல போன்களுக்கு செம Discounts
  7. OnePlus ரசிகர்கள் ரெடியா? Amazon Great Indian Festival Sale 2025-ல் பல மாடல்களுக்கு செம Discounts அறிவிச்சிருக்காங்க!
  8. Redmi மற்றும் Xiaomi ரசிகர்கள் ரெடியா? Amazon Great Indian Festival Sale 2025-ல் பல மாடல்களுக்கு செம Discounts அறிவிச்சிருக்காங்க
  9. வீட்டையே தியேட்டரா மாத்தணுமா? Amazon Sale-ல Lumio Vision-ன் Smart TVs மற்றும் Projectors-க்கு செம Discounts இருக்கு!
  10. Tablet வாங்க இதுதான் சரியான நேரம்! Amazon Great Indian Festival Sale 2025-ல் Apple முதல் Samsung வரைSpecial Discounts
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.