அறிமுகமானது சியோமியின் 'சூப்பர் பாஸ்' வயர்லெஸ் ஹெட்போன், விலை என்ன?

விளம்பரம்
Written by Ali Pardiwala மேம்படுத்தப்பட்டது: 15 ஜூலை 2019 12:47 IST
ஹைலைட்ஸ்
  • இந்த ஹெட்போன் 20 மணி நேரம் நீடிக்கும் பேட்டரி அளவை கொண்டுள்ளது
  • இரண்டு வண்ணங்களில் இந்த ஹெட்போன் அறிமுகமாகியுள்ளது
  • அமேசான் மற்றும் Mi தளங்களில் விற்பனையில் உள்ளது

40mm டைனமிக் டிரைவர் மற்றும் ப்ளூடூத் v5.0 ஆகிய அம்சங்களை இந்த ஹெட்போன் கொண்டுள்ளது

சியோமி நிறுவனம் தனது Mi  'சூப்பர் பாஸ்' வயர்லெஸ் ஹெட்போனை (Mi Super Bass Wireless Headphones) இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 1,799 ரூபாய் என்ற விலையில் அறிமுகமாகியுள்ள இந்த வயர்லெஸ் ஹெட்போன், சியோமியின் மலிவு விலை சாதனங்கள் பட்டியலில் இணைந்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் ப்ரைம் டே விற்பனையன்று அறிமுகமாகியுள்ள இந்த ஹெட்போன், அமேசான் ப்ரைம் டே சேலில் விற்பனையும் ஆகவுள்ளது. அமேசான் நிறுவனம், இந்த விற்பனையில் ஆயிரக்கணக்கான தயாரிப்புகளில் இந்த மலிவு விலை வயர்லெஸ் ஹெட்போனும் ஒன்று. 

சிவப்பு-கருப்பு மற்றும் சிவப்பு-தங்கம் என இரு வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள இந்த ஹெட்போனை, அமேசான் மற்றும் Mi தளங்களில் பெற்றுக்கொள்ளலாம்.

ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்தால், 20 மணி நேரம் வரை நீடிக்கும் பேட்டரி அளவை கொண்டுள்ளது, இந்த 'சூப்பர் பாஸ்' வயர்லெஸ் ஹெட்போன். மேலும், 40mm டைனமிக் டிரைவர் மற்றும் ப்ளூடூத் v5.0 தொடர்பையும் கொண்டுள்ளது இந்த ஹெட்போன். அதுமட்டுமின்றி, உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதியை இந்த ஹெட்போன் மூலம் நேரடியாக செயல்படுத்திக்கொள்ளலாம். 

பெயரில் குறிப்பிடப்பட்டிருப்பது போலவே, இந்த ஹெட்போன் சக்திவாய்ந்த பாஸ் திறனை கொண்டுள்ளது. 

இந்த ஹெட்போனை சார்ஜ் செய்துகொள்ள மைக்ரோ-USB போர்ட் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சார்ஜ் இல்லாத நேரங்களில், இந்த ஹெட்போனை சாதாரன ஹெட்போன் போலவும் பயன்படுத்திக்கொள்ளலாம். அவ்வாறு,  ஸ்மார்ட்போன்களில் இணைத்துக்கொள்ள 3.5mm சாக்கெட்டும் இந்த ஹெட்போனுடன் வழங்கப்பட்டுள்ளது..

Advertisement

இந்த ஹெட்போன், தற்போது சந்தையிலுள்ள போட் ராக்கர்ஸ் 400 (Boat Rockerz 400) மற்றும் ஏன்ட் ஆடியோ ட்ரிபில் 900 (Ant Audio Treble 900) ஆகிய மலிவு விலை வயர்லெஸ் ஹெட்போன்களுக்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஹெட்போனுடன் 4,999 ரூபாய் மதிப்பில் Mi சவுண்ட்பாரையும் சியோமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi, Xiaomi Mi Super Bass Wireless Headphones, Bluetooth, Headphones
Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.