வண்ணத்திரை, 6 நிறங்கள், இன்று வெளியாகிறது "Mi Band 4"!

வண்ணத்திரை, 6 நிறங்கள், இன்று வெளியாகிறது

Photo Credit: Weibo/ Lei Jun

6 வண்ணங்களில் வெளியாகவுள்ள 'Mi Band 4'

ஹைலைட்ஸ்
  • "Mi Band 4" வண்ணத்திரையை கொண்டு வெளியாகவுள்ளது.
  • இந்த ஸ்மார்ட்வாட்சில் ஹார்ட் ரேட் சென்சார் பொருத்தப்பட்டிருக்கலாம்
  • 6 வண்ணங்களில் வெளியாகவுள்ளது "Mi Band 4" ஸ்மார்ட்வாட்ச்
விளம்பரம்

சியோமியின் ஸ்மார்ட்வாட்ச்களில் புதிய அறிமுகமான "Mi Band 4" இன்று சீனாவில் அறிமுகமாகிறது. சியோமி நிறுவனம், இந்த ஸ்மார்ட்வாட்ச் குறித்து பல தகவல்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. இந்த நிறுவனம் தற்போது வரை வெளியிட்ட தகவல்களின்படி, புதிய ஸ்மார்ட்வாட்ச் இதன் முந்தைய ஸ்மார்ட்வாட்சான "Mi Band 3"-யை விட பெரிய வண்ணத்திரையை கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்வாட்ச் 6 வண்ணங்களில் வெளியாகவுள்ளது போன்ற தகவல்களை சியோமி நிறுவனம் சில டீசர்களின் வாயிலாக வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் எப்போது வெளியாகிறது, விலை என்னவாக இருக்கும், என்னென்ன சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் - முழு தலவல்கள் உள்ளே!

"Mi Band 4" - அறிமுக நிகழ்வு!

சியோமியின் புதிய ஸ்மார்ட்வாட்சான "Mi Band 4" முதன்முதலில் சீனாவில் தான் அறிமுகமாகவுள்ளது. இதன் அறிமுக நிகழ்வு ஜூன் 11 தேதியான இன்று நடைபெரும் என முன்னதாகவே சியோமி நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று சீனாவில் நடக்கவுள்ள இந்த நிகழ்வு அந்த நாட்டு நேரப்படி மதியம் 2 மணிக்கு துவங்கவுள்ளது. இது இந்திய நேரப்படி காலை 11:30 மணியாகும். இந்த நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை, சியோமி நிறுவனத்தின் தளத்தில் காணலாம்.

"Mi Band 4" - எதிர்பார்க்கப்படும் விலை!

இன்னும், அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படாத நிலையில், சீனாவில் வெளியாகும் இந்த ஸ்மார்ட்வாட்சின் விலை 199 சீன யுவான்களாக (1,994 ரூபாய்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இந்தியாவில் வெளியான "Mi Band 3", 1,999 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது.

"Mi Band 4" - எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்!

முன்னதாக இந்த ஸ்மார்ட்வாட்ச் பற்றி சியோமி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, இந்த  "Mi Band 4" ஸ்மார்ட்வாட்ச் கலர் OLED திரையை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச்  "Mi Band 3"-யின் திரையை விட பெரிய திரையை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சியோமி நிறுவனம் வெளியிட்டிருந்த மற்றொரு டீசரின்படி, இந்த ஸ்மார்ட்வாட்ச் 6 வண்ணங்களில் வெளியாகவுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்சின் முந்தைய வெர்ஷனான "Mi Band 3" மூன்று வண்ணங்களுடனே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்வாட்சில் மோபைல் பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் எனவும் சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை வைத்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்வாட்சில் ஸ்மார்ட்போன்களுக்கு அருகாமையில் கொண்டு சென்றால், அவற்றுடன் தானாகவே இணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும் NFC தொழில்நுட்பம் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்த ஸ்மார்ட்வாட்ச் இதன் முந்தைய ஸ்மார்ட்வாட்சை விட அதிகரித்த பேட்டரி அளவை கொண்டு வெளியாகலாம். இந்த "Mi Band 4" ஸ்மார்ட்வாட்சில் ஹார்ட் ரேட் சென்சார் பொருத்தப்பட்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Mi Band 4, Xiaomi Mi Band 4, Xiaomi
Gadgets 360 Staff The resident bot. If you email me, a human will respond. மேலும்
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. Huawei Enjoy 80 பெரிய பேட்டரி கொண்ட புதிய ஸ்மார்ட்போன் அறிமுகம்
  2. இந்தியாவில் அறிமுகமானது அட்டகாசமான Insta360 X5 புதிய 360 டிகிரி கேமரா
  3. Chromebook மாடல்களான CX14 மற்றும் CX15 அறிமுக செய்த ASUS நிறுவனம்
  4. ஆப்பிள் வாட்ச்களுக்கு இணையான அம்சம் இருக்கும் Redmi Watch Move
  5. HMD Global நிறுவனம் Mattel உடன் இணைந்து அறிமுகப்படுத்தும் Barbie Phone
  6. CMF Phone 2 Pro செல்போன் ஏப்ரல் 28ல் உலகமெங்கும் அறிமுகமாகிறது
  7. மார்க்கெட்டில் விலை குறைந்த 5G மாடல் போனாக அறிமுகமாகிறது Itel A95 5G
  8. 5G ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் புரட்சி செய்யப்போகும் OPPO K12s 5G செல்போன்
  9. OPPO நிறுவனம் தனது புதிய மிட் ரேஞ்ச் 5G ஸ்மார்ட்போன் OPPO A5 Pro 5G
  10. மோட்டோரோலாவின் முதல் லேப்டாப் Moto Book 60 இந்தியாவில் அறிமுகம்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »