இந்தியாவில் கலர் டிஸ்பிளேவுடன் வெளியானது Huawei Band 4...!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 24 ஜனவரி 2020 14:42 IST
ஹைலைட்ஸ்
  • Huawei Band 4, 0.96-inch 2.5D TFT கலர் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது
  • இது பேண்ட், 9 வகையான உடற்பயிற்சிகளையும் கண்காணிக்க உதவும்
  • இந்தியாவில், Huawei Band 4 விரைவில் பிளிப்கார்ட்டில் இருந்து கிடைக்கும்

Huawei Band 4, 6 வகையான தூக்கக் கோளாறுகளைக் கண்டறிய உதவும்

Huawei Band 4 வியாழக்கிழமையன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபரில் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இறுதியாக நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. Huawei Band 5i உடன் Huawei Band 4 பல வடிவமைப்பு ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்கிறது. மேலும், இது 0.96-inch கலர் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.


இந்தியாவில் Huawei Band 4-ன் விலை:

Huawei Band 4-ன் விலை ரூ. 1,999 ஆகும். இது ஒற்றை கிராஃபைட் கருப்பு நிறத்தில் வருகிறது. Huawei Band 4-க்கான ‘Notify Me' page இப்போது பிளிப்கார்ட்டில் நேரலையில் உள்ளது. இருப்பினும், சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் உடற்பயிற்சி பேண்ட் எப்போது விற்பனைக்கு வரும் என்பதை வெளியிடவில்லை.


Huawei Band 4-ன் விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள்:

Huawei Band 4, 80 x 160 பிக்சல்கள் தெளிவுதிறனுடன் 0-96inch TFT கலர் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. Apollo 3 நுண்செயலி, Huawei Band 4-ன் மையத்தில் உள்ளது. வழக்கமான பயணத்தின்போது எச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்பு அம்சங்களைத் தவிர, Huawei Band 4 ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி, படகோட்டுதல் மற்றும் பலவற்றுடன், ஒன்பது உடற்பயிற்சி முறைகளை வழங்குகிறது. ஹூவாய் அணியக்கூடியது 24x7 இதய துடிப்பு கண்காணிப்பு திறன் கொண்டது. ஆப்டிகல் இதய துடிப்பு சென்சாருக்கு நன்றி. மேலும் ,ஆறு வகையான தூக்கக் கோளாறுகளைக் கண்டறிய உதவும் என்று கூறப்படும் Huawei TruSleep 2.0 தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது.

இந்த மாத தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட Honor Band 5i போலவே, Honor Band 4-ஐ நேரடியாக மின்சாரம் மூலமாகவும் சார்ஜ் செய்ய முடியும். இந்த ப்ளக் மற்றும் சார்ஜ் அமைப்பு, கேபிள்களை அல்லது தனி சார்ஜிங் மையத்தைத் தேடுவதில் உள்ள சிக்கலை நீக்குகிறது. பிற அம்சங்களில் Find My Phone மற்றும் Remote Shutter ஆகியவை அடங்கும். Huawei Band 4, 91mAh பேட்டரியை பேக் செய்கிறது. இது, ஒரே சார்ஜில் ஒன்பது நாட்கள் வரை பேட்டரியை வழங்குவதாகக் கூறப்படுகிறது. இது Android 4.4 அல்லது அதற்கு மேற்பட்ட சாதனங்கள் மற்றும் iOS 9.0 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்புகளுடன் இணக்கமானது. Huawei Band 4, 24 கிராம் எடையும், 56 x 18.5 x 12.5mm அளவையும் கொண்டுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
தொடர்புடைய செய்திகள்
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. உங்க WhatsApp அக்கவுண்ட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு! Strict Account Settings மோட் பற்றி தெரிஞ்சுக்கோங்க
  2. Moto G67 Power 5G: 7000mAh Battery & Snapdragon 7s Gen 2 உடன் இந்தியாவில் அறிமுகம்!
  3. Motorola Edge 70: 5.99mm Slim Profile, Snapdragon 7 Gen 4 உடன் அறிமுகம்
  4. OnePlus Ace 6 Pro Max: 16GB RAM, 8000mAh Battery உடன் விரைவில் அறிமுகம்
  5. Lava Agni 4: 7000mAh Battery & Aluminium Frame உடன் நவம்பர் 20-ல் அறிமுகம்
  6. 7000mAh பேட்டரி, 45W சார்ஜிங்! பட்ஜெட் செக்மெண்ட்ல Realme C85-ன் அதிரடி
  7. Vivo Y19s 5G: 6000mAh Battery & Dimensity 6300 உடன் இந்தியாவில் அறிமுகம்
  8. Oppo Reno 15, Pro, Mini: 200MP கேமரா & Dimensity 8450 உடன் டிசம்பரில் அறிமுகம்
  9. ஃப்ளாக்ஷிப் கில்லர் Poco திரும்பி வந்துட்டான்! F8 Ultra மற்றும் Pro பற்றி வெளியான அதிரடி லீக்ஸ்
  10. Samsung-ன் அடுத்த மிரட்டல் A சீரிஸ் போன்! Galaxy A57 Test Server-ல Spotted
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.