மலிவு விலையில் கலக்கல் 'வயர்லெஸ் ஹெட்போன்ஸ்'- முழு விவரம் உள்ளே!

விளம்பரம்
Written by Ali Pardiwala மேம்படுத்தப்பட்டது: 7 மே 2019 15:15 IST
ஹைலைட்ஸ்
  • 300mAh பேட்டரி அளவு, 10 மணி நெர பயன்பாடு
  • ப்ளூடூத் v5.0 இணைப்பு
  • அமேசானில் இதன் விலை Rs 1,699.

அமேசானில் விற்பனையில் உள்ள ப்ளாபுன்க்ட் BH01 ஹெட்போன்

ப்ளாபுன்க்ட் நிறுவனம் என்பது ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த, 1923 ஆம் துவங்கப்பட்ட மிகவும் பழமையான நிறுவனம். இது கார்களுக்கான ரேடியோ மற்றும் ஒலிபெருக்கிகள் தயாரிப்பதில் பெயர் போன நிறுவனமாகும். கடந்த சில மாதங்களில், இந்த நிறுவனம் கார்களுக்கான ஒலிபெருக்கிகள் தயாரிப்பத்தைத் தாண்டி பல இடங்களில் தங்களின் ஒலிபெருக்கியை பயன்படுத்தும் வண்ணம், தனது உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது. வீடுகளில் தொலைகாட்சிகளுக்கான ஒலிபெருக்கிகள், வயர்லெஸ் ஒலிபெருக்கிகள், ஹெட்பொன்கள் மற்றும் இயர்போன்கள் என தன் உற்பத்தியை அனைத்து பக்கங்களிலும் முடுக்கிவிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ப்ளாபுன்க்ட் BH01 என்ற ஒரு மலிவு விலையிலான வயர்லெஸ் ஹெட்போன்ஸ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த நிறுவனம். அமேசானில் இதன் விலை ரூ.1,699.

இந்த ஹெட்போன்ஸ் காதுகளின் மேல் பொருத்துவது போன்ற அமைப்பு கொண்டுள்ளது. மடக்கிகொள்ளும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ள இதன் அமைப்பு, எளிதில் எங்கும் எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும். மேலும் 40mm ஒலிமாற்றும் இயக்கிகள், ப்ளூடூத் v5.0 இணைப்பு கொண்டு இந்த ஹெட்போன்ஸ் செயல்படுகிறது. இந்த ஹெட்போன்ஸில் ஒரு மைக்ரோபோன் பொருத்தப்பட்டுள்ளது. அதனால் மொபைல் போன்கள் பேசிக்கொள்ள வசதியாக இருக்கும். இந்த ஹெட்போன்ஸிலேயே ஒலி அளவை மாற்றிக்கொள்ளும் பட்டன்களும் பொருத்தப்பட்டுள்ளது.

300mAh பேட்டரி அளவு கொண்ட இந்த ஹெட்போன்ஸை, ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் தொடர்ந்து 10 மணி நெரம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், பேட்டரி தீர்ந்துபோகும் பட்சத்தில், இதை உங்கள் மொபைல்போனில் வயர் மூலம் இணைத்து பயன்படுத்தும் வண்ணம் இந்த ஹெட்போன்ஸ் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரட்டை இணைப்பு முறையில், இந்த ஹெட்போன்ஸை ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களுடன் இணைத்துக் கொள்ளலாம். இந்த ஹெட்போன்ஸை பல உபயோகமான இணைப்பு வழிகளுடனேயே வெளியிட்டுள்ளது, இந்த நிறுவனம். 

சமீத்தில் இந்த நிறுவனம், ப்ளாபுன்க்ட் BTW01 என்ற ப்யூர் வயர்லெஸ் ஹெட்போன் ஒன்றை Rs.5,999-ற்கு வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சமீப காலங்களில் இந்த நிறுவனத்தின் ஹெட்போன்ஸ்கள், அதன் தரத்தாலும், அதன் அம்சங்களாலும் பலரின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்கிறது. 


Which are the best budget Bluetooth earphones and headphones in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Blaupunkt, Headphones, Bluetooth
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஐபோன் 18 சீரிஸ் விலை உயர்வு முந்தைய கணிப்புகளை விடக் குறைவாக இருக்கும்!
  2. சாம்சங் கேலக்ஸி A27 5G அறிமுகம்: ஸ்னாப்டிராகன் சிப், 6.7-இன்ச் திரை மற்றும் சலுகைகள்!
  3. ஆப்பிள் விலை உயர்வு: மேக், ஐபேட் விலை அதிகரிப்பு, ஐபோன்களுக்கு விலக்கு
  4. Oppo Reno 16 முதல் பார்வைகள் (First Impressions)
  5. ஒன்பிளஸ் நார்ட் பட்ஸ் 4 இந்தியாவில் அறிமுகம்: 52dB ANC மற்றும் 54 மணிநேர பேட்டரி லைஃப்
  6. லாவா ஸ்மார்ட் 4 பிளஸ் 5,000mAh பேட்டரி, 6.75-இன்ச் டிஸ்ப்ளேவுடன் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள்
  7. வாட்ஸ்அப் நிறுவனம் தெரியாத எண்களிலிருந்து வரும் அரட்டைகள் (Chats) குறித்து பயனர்களை எச்சரிக்கத் தொடங்கியுள்ளது
  8. அமேசான் இந்தியாவின் விரைவு வர்த்தகம் 300 நகரங்களுக்கு விரிவாக்கம்; பணியாளர்களுக்கு புதிய நலத்திட்டம் அறிமுகம்!
  9. அசுஸ் ROG கேமிங், ப்ரோஆர்ட் லேப்டாப்கள் ரூ.1.99 லட்சம் ஆரம்ப விலையில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தன!
  10. ஜூன் 29 இந்திய அறிமுகத்தை உறுதி செய்தது சாம்சங் கேலக்ஸி M47 5G; முக்கிய அம்சங்கள் கசிவு!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.