Photo Credit: Jio
Jio கஸ்டமர்கள் மட்டுமல்லாமல், மற்ற ஸ்மார்ட் டிவைஸ் பிரியர்களும் அசறும் விதமாக நம்ப முடியாத பட்ஜெட்டில் JioTag Air இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. முந்தைய மாடலில்Jiothings App சப்போர்ட் மட்டுமே கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த JioTag Air மாடலில் Apple நிறுவனத்தின் Find My நெட்வொர்க் சப்போர்ட் வருகிறது. இதனால் ஆண்ட்ராய்டு யூசர்கள் மட்டுமல்லாமல் ஆப்பிள் யூசர்களையும் JioTag Air தட்டித்தூக்க இருக்கிறது. இது சாவிகள், சாமான்கள், பணப்பைகள் மற்றும் செல்லப்பிராணிகள் போன்ற தொலைந்து போன அல்லது திருடப்பட்ட பொருட்களைக் கண்டறிய உதவுகிறது. கடந்த மாதம் Jio Finance ஆப் அறிமுகமானதைத் தொடர்ந்து JioTag Air பற்றிய அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
JioTag Air இந்தியாவில் 1,499 ரூபாய் என்ற அறிமுக விலையில் ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் அமேசான் இந்தியா வழியாக மூன்று வண்ண விருப்பங்களில் வருகிறது. நீலம், சாம்பல் மற்றும் சிவப்பு வண்ணங்களில் கிடைக்கிறது. CredUPI, Paytm மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மூலம் பரிவர்த்தனை செய்யும் போது கேஷ்பேக் பெறலாம்.
JioTag Air மூலம் இரண்டு விதமான கண்காணிப்பு பயன்பாடுகளை மேற்கொள்ள முடியும். ஆண்ட்ராய்டில் JioThings ஆப்ஸுடன் இணைத்து பயன்படுத்தப்படலாம். அதேசமயம் Apple பயனர்கள் iPhone, iPad மற்றும் Mac போன்ற சாதனங்களில் Find My நெட்வொர்க் ஆப்ஸுடன் இணைந்து இதை பயன்படுத்தலாம். JioThings செயலியை ஆப்பிளின் இயங்குதளங்களிலும் ஆப் ஸ்டோர் வழியாகப் பயன்படுத்தலாம். இருப்பினும் JioTag Air சாதனத்தை ஒரே நேரத்தில் ஒரு ஆப்பை வைத்து மட்டுமே கன்ட்ரோல் செய்ய முடியும்.
இது iOS 14 அல்லது அதற்குப் பிறகு இயங்கும் ஐபோன் மாடல்களுடனும், Android 9 மற்றும் அதற்குப் பிந்தைய ஃபார்ம்வேர்களில் உள்ள Android ஸ்மார்ட்போன்களில் சப்போர்ட் செய்கிறது. டிராக்கரில் புளூடூத் 5.3 பொருத்தப்பட்டுள்ளது. 90-120 dB அளவுக்கு ஒலி எழுப்பும் ஸ்பீக்கருடன் வருகிறது. இது 38x38x7 மிமீ அளவையும் 10 கிராம் எடையையும் கொண்டுள்ளது.
Apple நிறுவனத்தின் Find My நெட்வொர்க் சப்போர்ட் இருக்கிறது. 12 மாதம் வரையிலும் பேட்டரி தாங்க கூடியது. பேட்டரியுடன் வருகிறது, கூடுதல் பேட்டரி மற்றும் லேன்யார்டுடன் ஜியோடேக் ஏர் சில்லறை பெட்டியில் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் Disconnection Alert சப்போர்ட் உள்ளது. ப்ளூடூத் ரேஞ்சுக்கு மேல் ஜியோடேக் ஏர் கொண்டுசெல்லப்பட்டால், ஆப் மூலம் அலெர்ட் பெற்று கொள்ளலாம். இது தவிர லோகேஷன் அப்டேட்கள் கொடுக்கப்படும். உங்களது ப்ளூடூத் ரேஞ்சுக்கு மீண்டும் வந்துவிட்டால், ஆட்டோமேட்டிக் ரீகனெக்ட் செய்துகொள்ளப்படும். Last Mode ஆப்ஷன் உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்