வருகிறது Amazfit Bip S Lite ஸ்மார்ட் வாட்ச்... விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ..!

வருகிறது Amazfit Bip S Lite ஸ்மார்ட் வாட்ச்... விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ..!

மூன்று வித நிறங்களில் அமேஸ்பிட் பிப் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்படுகிறது

ஹைலைட்ஸ்
  • Amazfit Bip S Lite is a toned-down version of Amazfit Bip S
  • Amazfit Bip S Lite carries 8 sport modes and 5 ATM water-resistant build
  • It will come with 40 watch faces at the time of launch
விளம்பரம்

ஹூவாமி நிறுவனத்தின் புத்தம் புதிய அமேஸ்ஃபிட் ஸ்மார்ட் வாட்ச் வரும் 29 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. 

ஸ்மார்ட் வாட்ச் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஹூவாமி தற்போது அமேஸ்ஃபிட் பிப் எஸ் லைட் (Amazfit Bip S Lite) என்ற ஸ்மார்ட்வாட்ச்சைத் தயாரித்துள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் வரும் ஜூலை 29 ஆம் தேதி ஃபிளாஷ் சேல் முறையில் விற்பனை செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இதனை அமேஸ்ஃபிட் தளத்திலும், ஃபிளிப்கார்ட்டிலும் பெற முடியும்.

இந்த ஸ்மார்ட்வாட்ச் மூன்று விதமான கலர் வேரியண்டில் அறிமுகம் செய்யப்படுகிறது. 30 நாட்கள் வரையில் பேட்டரி நீடித்து நிற்கும். மிகமெல்லிதாக, எடைகுறைவாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 5ATM வாட்டர் ரெசிஸ்டெண்ட் தொழில்நுட்பமும் உள்ளது. 

அமேஸ்பிட் பிப் எஸ் லைட் விலை:

இந்தியாவில் அமேஸ்பிட் எஸ் லைட் ஸ்மார்ட் வாட்ச்சின் விலை ரூ.3,799 என்று நிர்ணயிக்கப்ட்டுள்ளது. இந்தப் பொருள் வரும் 29 ஆம் தேதி அறிமுகமாகும் போது, அறிமுக சலுகைகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமேஸ்பிட் பிப் எஸ் லைட் சிறப்பம்சங்கள்:

அமேஸ்பிட் வாட்ச் எப்போதும் அதன் நிறத்திற்கு பெயர் பெற்றது ஆகும். கண்ணைக் கவரும் டிசைன்களில்  காட்சியளிக்கும். அந்த வகையில், தற்போது அறிமுகமாகவுள்ள அமேஸ் பிப் எஸ் லைட் ஸ்மார்ட்வாட்ச்சும் மூன்று விதமான நிறங்களில் உள்ளன. ஆனால், இதன் திரை அளவு, பிக்சல் குறித்த விவரங்கள் அறிமுக தினத்தன்றுதான் தெரியவரும். 

இரண்டு விதமான கஸ்டம் விட்ஜெட்களுடன், எட்டு விதமான ஸ்போர்ட்ஸ் மோடுகள் வழங்கப்பட்டுள்ளன. யோகா, சைக்கிளிங், வாக்கிங், ரன்னிங், ஜிம் வொர்க் அவுட் உள்ளிட்ட மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. பயனர்கள் தங்களது செயல்பாடுகளை அமேஸ்பிட் ஆப்பின் மூலமாகத் தெரிந்துகொள்ள முடியும். மேலும், ப்ளூடூத் மியூசிக் கண்ட்ரோல், வானிலை நிலவரம், ஸ்லீபம் மானிட்டர், இதயத்துடிப்பு உணர்திறன் போன்ற வசதிகளும் உள்ளன. இதன் எடை வெறும் 30 கிராம் ஆகும்.


Is Realme TV the best TV under Rs. 15,000 in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
  1. மார்க்கெட்டில் விலை குறைந்த 5G மாடல் போனாக அறிமுகமாகிறது Itel A95 5G
  2. 5G ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் புரட்சி செய்யப்போகும் OPPO K12s 5G செல்போன்
  3. OPPO நிறுவனம் தனது புதிய மிட் ரேஞ்ச் 5G ஸ்மார்ட்போன் OPPO A5 Pro 5G
  4. மோட்டோரோலாவின் முதல் லேப்டாப் Moto Book 60 இந்தியாவில் அறிமுகம்
  5. CMF Phone 2 Pro செல்போன் 10% வேகமான CPU உடன் அசத்தலாக வெளியாகிறது
  6. அட்ராசக்க அசத்தபோகும் அம்சங்களுடன் வெளியாகும் Vivo X200 Ultra ஸ்மார்ட்போன்
  7. அசர வைக்கும் வசதிகளுடன் PhonePe கொண்டு வந்துள்ள UPI Circle அம்சம்
  8. Honor Power செல்போன் சீனாவில் வெற்றிகரமாக அறிமுகமாகி அமர்க்களம்
  9. கவர்ச்சிகரமான விலையில் கிடைக்கக்கூடிய Realme 14T வருகிறது
  10. சாம்சங் நிறுவனத்தின் புதிய பிரீமியம் ஸ்மார்ட்போன் Galaxy S25 Ultra
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »