ஆகஸ்ட் 28-ல் அறிமுகமாகிறது 'ரெவோல்ட் RV 400' எலக்ட்ரிக் பைக்!

விளம்பரம்
Written by Aditya Shenoy மேம்படுத்தப்பட்டது: 8 ஆகஸ்ட் 2019 14:18 IST
ஹைலைட்ஸ்
  • இந்த பைக்கின் உச்ச வேகம் 85 கிமீ
  • ஒரு முறை சார்ஜ் செய்தால் 156 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய முடியும்
  • இந்த பைக் ஒரு 4G சிம் இணைக்கப்பட்டே வெளியாகிறது

இந்த எலக்ட்ரிக் பைக் இந்தியாவில் ஆகஸ்ட் 28 அன்று அறிமுகமாகவுள்ளது

மைக்ரோமேக்ஸ் துணை நிறுவனரும் முன்னாள் நிர்வாக இயக்குனருமான ராகுல் சர்மாவால் நிறுவப்பட்ட ஒரு நிறுவனம்தான் இந்த ரெவோல்ட் இன்டெலிகார்ப் (Revolt Intellicorp). இந்த நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய்வுள்ளது. இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கும் இந்த 'ரெவோல்ட் RV 400' பைக், ரிமோட் ஸ்டார்ட் வசதி, நிகழ்நேர தகவல் மற்றும் கண்டறிதல், ஜியோ-ஃபென்சிங், பைக் லொக்கேட்டர், மற்றும் பல சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. 15A சார்ஜர் கொண்ட இந்த பைக்கை ஒரு முறை முழுவதுமாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் தேவைப்படும். இந்த பைக்கை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 156 கிமீ தூரம் கடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியான வசதிகளை கொண்ட இந்த எலக்ட்ரிக் பைக் இந்தியாவில் ஆகஸ்ட் 28 அன்று அறிமுகமாகவுள்ளது

முன்னதாக இந்த பைக்கிற்கான முன்பதிவு ஆன்லைனில் ஜூன் 25-ல் இந்த நிறுவனத்தின் தளத்தில் துவங்கியது. டெல்லியை செர்ந்தவர்கள் அமேசான் நிறுவனத்தின் தளத்தில் நடக்க இருக்கும் இந்த முன்பதிவில் 1,000 ரூபாய் செலுத்தி, இந்த பைக்கிற்கான முன்பதிவை செய்துகொள்ளலாம் எனக் கூறியிருந்த இந்த நிறுவனம், இன்னும் நான்கு மாதங்களில் இதன் விற்பனை நிலையங்களை டெல்லி, பூனே, ஹைத்ராபாத், சென்னை, நாக்பூர், பெங்களூரு, அகமதாபாத் ஆகிய நகரங்களில் நிறுவவுள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தது. இந்த பைக் சிவப்பு (Rebel Red) மற்றும் கருப்பு (Cosmic Black) ஆகிய வண்ணங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. ஹரியானாவில் நிறுவப்பட்டுள்ள இந்த 'ரெவோல்ட் RV 400' எலக்ட்ரிக் பைக்கின் உற்பத்தி நிலையம், ஆண்டுக்கு 1.2 லட்சம் பைக்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் இந்த பைக்கிற்கான விலை அறிவிக்கப்படவில்லை. ஆகஸ்ட் 28 அன்று இத ன் அறிமுகத்தின்போது, இந்த பைக்கின் விலை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு 125 சிசி பைக்கின் திறனை கொண்டுள்ளது இந்த RV 400 என்கிறது ரெவோல்ட் நிறுவனம். டிஸ்க் பிரேக், உலோக கலப்ப சக்கரங்கள், பின்புறத்தில் மோனோஷாக் என பல அம்சங்களை கொண்டுள்ள இந்த் பைக்கின் உச்ச வேகம் எவ்வளவு தெரியுமா, இந்த வாகனம் ஒரு மணி நேரத்திற்கு 85 கிமீ வரை செல்லும் உச்ச வேகத்தை கொண்டுள்ளது. RV 400-ன் இந்த திறன், பெட்ரோல் பைக்கை உபயோகிப்போரின் பார்வையையும் இதன் பக்கம் திருப்பியுள்ளது. இணையம் சார்ந்த வசதிகளை பயன்படுத்த இந்த பைக் ஒரு 4G சிம் இணைக்கப்பட்டே வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த பைக் சார்ந்த செயலி விரைவில் ஆப்பிள் மற்றும் கூகுள் ஸ்டோர்களின் கதவை தட்டவுள்ளது.

இந்த ரிவால்ட் RV 400 பைக்கில் லித்தியம்- அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 156 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்ய முடியும் என்று ARAI சான்றிதழ் கொடுத்துள்ளது. பேட்டரியை வண்டியில் இருந்து தனியாக பிரித்து மாட்டிக்கொள்ளலாம். இந்த பேட்டரியை கழட்டி மாற்றுவதை நொடிகளில் செய்துவிடலாம். இதனால், ஒரே நேரத்தில் பல பேட்டரிகளை பயன்படுத்துவதில் கடினம் இருக்காது.

 RV 400-ல் மூன்று வகை பயண முறை கொடுக்கப்பட்டுள்ளது- ஈகோ, சிட்டி, ஸ்போர்ட்+. நேரத்துக்கு ஏற்றாற் போல இந்த வகைகளில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். இது பேட்டரி திறனை அதிகரிக்க உதவும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Revolt electric bike, Revolt Motors, Revolt Intellicorp
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. 7,000mAh பேட்டரி கொண்ட உலகின் முதல் போன்! Oppo F31 சீரிஸ் லீக் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
  2. அவசர வேலைகளில் 'உதவாத' ஏர்டெல்! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை சேவை முடக்கம்
  3. மடக்கலாம், மிரட்டலாம்! Honor-ன் புது போன் சந்தையில் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
  4. பெங்களூருவில் Apple-ன் புதிய கடை! செப்டம்பர் 2-ல் திறப்பு! என்ன ஸ்பெஷல்?
  5. இந்தியாவில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL லான்ச்! ₹79,999-க்கு Google-ன் புது அஸ்திரம்
  6. கூகிளின் முதல் IP68 ஃபோல்டபிள் போன் லான்ச்! ₹1.72 லட்சத்தில் Pixel 10 Pro Fold
  7. Redmi 15 5G: ₹15,000-க்குள்ளே 7,000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே உடன் மாஸ் என்ட்ரி!
  8. Airtel-ன் அதிர்ச்சி அறிவிப்பு! ₹249 ரீசார்ஜ் திட்டம் நீக்கம்! இனி ₹50 அதிகம் செலவு செய்யணும்
  9. Honor X7c 5G லான்ச்! ₹14,999-க்கு 5G போன்! Snapdragon 4 Gen 2 SoC, 5,200mAh பேட்டரி
  10. Airtel-ஆல் வந்த ஜாக்பாட்! 6 மாதங்களுக்கு Apple Music இலவசம்! எப்படி ஆக்டிவேட் செய்வது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.