போட்டி நிறுவனங்களை விட 10 மடங்கு கூடுதல் வாடிக்கையாளர்களைப் பெற்ற ஜியோ

போட்டி நிறுவனங்களை விட 10 மடங்கு கூடுதல் வாடிக்கையாளர்களைப் பெற்ற ஜியோ

கிராமங்களில் மட்டும் ஜூலையில் 5.803 வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு கிடைத்துள்ளனர்.

ஹைலைட்ஸ்
  • ஜூலையில் மட்டும் 19.62 சதவீத பங்குகளை ஜியோ பெற்றுள்ளது.
  • வோடஃபோன், ஐடியாவை விட அதிக பங்குகள் ஜியோவிடம் உள்ளன
  • 29.31 சதவீத பங்குகளுடன் ஏர்டெல் முதலிடத்தில் உள்ளது
விளம்பரம்

ஜூலையில் அதிகளவு வாடிக்கையாளர்களை பெற்ற நிறுவனமாக ஜியோ உள்ளதென்று டெலிகாம் ஒழுங்காற்று அமைப்பான ட்ராய் தகவல் தெரிவித்துள்ளது. ஜூலையில் மட்டும் மொத்தம் 1.17 கோடி புதிய வாடிக்கையாளர்கள் ஜியோவுக்கு கிடைத்துள்ளனர். இது மற்ற போட்டி நிறுவனங்களான வோடஃபோன், ஏர்டெல், பி.எஸ்.என்.எல். ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது 10 மடங்கு அதிகம்.

ஜூலையில் வோடஃபோன், ஏர்டெல், ஐடியா மற்றும் பி.எஸ்.என்.எல். ஆகியவற்றின் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 17 லட்சம். ஆனால் ஜியோவுடைய புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 1.17 கோடி.

ஒட்டுமொத்த டெலிகாம் சந்தையை பொறுத்தளவில் ஜூன் மாதத்தில் மொத்தம் 116.8 கோடி வாடிக்கையாளர்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை ஜூலை மாத முடிவில் 117.32 கோடியாக உயர்ந்துள்ளது. வயர்லெஸை பொறுத்தளவில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 114 கோடியில் இருந்து 115 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜியோவின் இந்த அதிரடி வெற்றிக்கு ஜியோ மான்சூன் ஹங்காமா ஆஃபர் ஓர் முக்கிய காரணம். இதனால்தான் 1.17 கோடி வாடிக்கையாளர்கள் ஜூலை மாதத்தில் கிடைத்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக வோடஃபோன் உள்ளது. இருப்பினும் ஜூனை விட ஜூலையில் அதன் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. இதேபோன்று 31 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை ஏர்டெல் நிறுவனம் பெற்றுள்ளது.

 

trai july TRAi

ஜியோவின் இந்த அதிரடி வெற்றிக்கு ஜியோ மான்சூன் ஹங்காமா ஆஃபர் ஓர் முக்கிய காரணம்.

ஒட்டுமொத்த அளவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாக ஏர்டெல் உள்ளது. இதன் மார்க்கெட் ஷேர் 29.81 சதவீதம். ஆனால், ஜூன் மாதத்தில் இதன் மார்க்கெட் ஷேர் 30.05 சதவீதமாக இருந்தது.

இதற்கு அடுத்தபடியாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் 22 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை ஜூலையில் பெற்றுள்ளது. 9.80 மார்க்கெட் ஷேர் பி.எஸ்.என்.எல்லிடம் உள்ளது. 19.07 மார்க்கெட் ஷேர் ஐடியாவிடம் உள்ளது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: TRAI, Reliance Jio, Vodafone, Airtel, Idea
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »