டாடா ஸ்கையின் அதிரடி ஆஃபர்! வாடிக்கையாளர்கள் குஷி! 

டாடா ஸ்கையின் அதிரடி ஆஃபர்! வாடிக்கையாளர்கள் குஷி! 

டாடா ஸ்கை சலுகை, சந்தாதாரர்கள் தங்கள் கணக்கை ரீசார்ஜ் செய்ய இயலாதவர்களுக்கு வழங்குகிறது

ஹைலைட்ஸ்
  • இந்த கடன் அதன் வாடிக்கையாளர்களுக்கு தற்காலிக ஓய்வு அளிப்பதாக தெரிகிறது
  • டாடா ஸ்கை எட்டாவது நாளில் பயனரின் கணக்கில் டெபிட் செய்யும்
  • கடன் சலுகையை செயல்படுத்த, 080-61999922 என்ற எண்ணில் மிஸ்டு கால் கொடுங்கள்
விளம்பரம்

தனது வாடிக்கையாளர்களுக்கு ஓரளவு நிவாரணம் வழங்க, டாடா ஸ்கை 7 நாள் இருப்பு கடன் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. பயனர்கள் தங்கள் கணக்குகளை ரீசார்ஜ் செய்ய முடியாவிட்டால், இந்த சலுகை வாடிக்கையாளர்களுக்கு, 7 நாள் கடன் பெற உதவும். இந்தியா 21 நாட்களுக்கு முழுமையான ஊரடங்கு நிலையில் உள்ளது, மேலும் இந்த சலுகை செயலிழக்கப்பட்ட கணக்குகளுக்கானது. கணக்குகள் செயலிழக்கச் செய்யப்பட்ட அனைத்து வாடிக்கையாளர்களும் இந்த 7 நாள் கிரெடிட்டைப் பெற டாடா ஸ்கையிலிருந்து ஒரு செய்தியைப் பெறுகிறார்கள். கடன் தொகை எட்டாவது நாளில் பயனரின் கணக்கிலிருந்து டெபிட் செய்யப்படும்.

இந்த புதிய டாடா ஸ்கை சலுகை செயலிழக்கப்பட்ட கணக்குகளுக்கு கிடைக்கிறது. இந்த சந்தாதாரர்களுக்கு, ஆபரேட்டர் ஒரு செய்தியை அனுப்புகிறார், “உங்கள் டாடா ஸ்கை a/c செயலற்றதா! ரீசார்ஜ் செய்ய முடியாவிட்டால், ஆர்.எம்.என்-ல் இருந்து 080-61999922 என்ற எண்ணில் 7 நாட்கள் நிலுவை பெறலாம், 8-வது நாளில் டெபிட் செய்யப்ப்டும். அடுத்த 4 மணி நேரத்தில் A/c கிரெடிட் ஆகிவிடும். சேவைகளை மீண்டும் செயல்படுத்துவதற்கு உங்கள் செட்-டாப் பெட்டியை ஆன் / காத்திருப்பு மோடில் வைக்கவும். ”

நீங்கள் மிஸ்டு கால் கொடுத்ததும், உங்கள் கணக்கு 7 நாள் இருப்புடன் வரவு வைக்கப்படும், மேலும் சந்தாதாரர் பார்க்க சேனல்கள் மீண்டும் இயக்கப்படும். எட்டாவது நாளில், டாடா ஸ்கை பயனரின் கணக்கிலிருந்து கடன் தொகையை தானாக டெபிட் செய்யும். இந்த சலுகையை முதலில் ட்ரீம்.டி.டி.எச் கண்டுபிடித்தது.

முழு தேசமும் ஊரடங்கு உள்ள நிலையில், இந்த கடன் அதன் வாடிக்கையாளர்களுக்கு தற்காலிக ஓய்வு அளிப்பதாக தெரிகிறது. இந்த மாத தொடக்கத்தில், டாடா ஸ்கை அதன் எஸ்டி மற்றும் எச்டி செட்-டாப் பெட்டிகளின் விலையை அதிகரித்தது. டாடா ஸ்கை எச்டி மற்றும் எஸ்டி செட்-டாப் பாக்ஸ் மாடல்கள் இரண்டும் அதிகாரப்பூர்வ தளத்தில் ரூ.1,499-க்கு கிடைக்கிறது.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Tata Sky, India Lockdown
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »