நெட் நியூட்ராலிட்டி, புதிய டெலிகாம் பாலிசிக்கு அனுமதி அளித்த டெலிகாம் கமிஷன்

விளம்பரம்
Written by Press Trust of India மேம்படுத்தப்பட்டது: 12 ஜூலை 2018 00:03 IST
ஹைலைட்ஸ்
  • டெலிகாம் கமிஷன் நெட் நியூட்ராலிட்டிக்கு அனுமதி வழங்கியுள்ளது
  • புதிய டெலிகாம் பாலிசி உருவாகியுள்ளது
  • கிராம பஞ்சாயத்துகளில் 12.5 லட்சம் வைஃபை ஹாட் ஸ்பாட்டுகள்

 

டெலிகாம் கமிஷன் நெட் நியூட்ராலிட்டிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம், சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களது அதிகாரத்தை கொண்டு இணைய சேவையை நிறுத்தவோ, வேகத்தை கூட்டவோ, குறைக்கவோ முடியாது. கடந்த 2016 ஆம் ஆண்டு, நெட் நியூட்ராலிட்டி விவகாரம் முக்கிய விவாதப்பொருளாக இருந்தது குறிப்பிடத்தக்கது

 

“இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு ஆணையத்தின் பரிந்துரைப்படி நெட் நியூட்ராலிட்டிக்கு டெலிகாம் கமிஷன் அனுமதி அளித்துள்ளது” என்று தகவல் தொடர்பு செயலாளர் அருணா சுந்தரராஜன் தெரிவித்தார்.

 

2018 தேசிய டிஜிட்டல் தகவல் தொடர்பு பாலிசி என்ற புதிய திட்டத்திற்கும் டெலிகாம் கமிஷன் அனுமதி அளித்துள்ளது

 

“இன்றைய பொதுக்கூட்டத்தில், இந்தியாவின் முன்னேற்றத்திற்கு டிஜிட்டல் வளர்ச்சி மிக முக்கியமானது என அனைவரும் கருத்து தெரிவித்தனர். நகரப்புறங்களில் டிஜிட்டல் சேவை வசதிகளை விரைவில் கொண்டு சேர்க்க வேண்டும் என்று நிதி அயோக் தலைவர் (அமிதாப் கண்ட்) தெரிவித்தார்” என்று அருணா தெரிவித்தார்

Advertisement

 

2018 டிசம்பர் மாதத்திற்குள், 6000 கோடி ரூபாய் செலவில், நாட்டில் உள்ள பல்வேறு கிராம பஞ்சாயத்துகளில் 12.5 லட்சம் வைஃபை ஹாட் ஸ்பாட்டுகள் அமைக்க டெலிகாம் கமிஷன் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Telecom Commission, TRAI, DoT
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.