Photo Credit: Facebook/ Jio
கடந்த திங்கட்கிழமைன்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI ஒரு புதிய தகவல் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி, ஏப்ரல் மாதத்தில் மட்டும், ஜியோ நிறுவனம் 80.82 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. ஜியோ நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை என்பது, ஏப்ரல் மாதத்தின் முடிவில் 31.48 கோடி என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது. ஜியோ தவிர்த்து வாடிக்கையாளர்கள் பெற்றிருந்த ஒரே நிறுவனம் பி.எஸ்.என்.எல் தான். இந்த அறிக்கையின்படி ஏப்ரல் மாதத்தில் மட்டும், பி.எஸ்.என்.எல் நிறுவனம் 2.28 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. இந்த நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சுமார் 11.59 கோடி.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் மொத்த தொலைதொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை என்பது 0.04 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதத்தின் துவக்கத்தில் 116.18 கோடியாக இருந்த தொலைதொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை, அந்த மாதத்தின் முடிவில் 116.23 என்ற எண்ணிக்கையை எட்டியுள்ளது.
நகரப்புறங்களில் 65.04 கோடியாக இருந்த தொலைதொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 65.23 கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரம், கிராமப்புறங்களில் தொலைதொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 51.13 கோடியிலிருந்து 50.99 கோடியாக குறைந்துள்ளது." என்கிறது TRAI-யின் அறிக்கை.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு நிருவனங்களான ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஆகிய நிறுவனங்கள், இந்த ஏப்ரல் மாதத்தில் தங்களின் வாடிக்கையாளர்களை இழந்துள்ளனர்.
TRAI-யின் அறிக்கைபடி ஏப்ரல் மாதத்தில் மட்டும் 32.89 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த ஏர்டெல் நிறுவனம், 32.19 கோடி வாடிக்கையாளர்கள் என்ற எண்ணிற்கு குறைந்துள்ளது. மறுபுறம் மற்றொரு மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனமான வோடாபோனோ 15.82 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. தற்போது இதன் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 39.32 கோடி.
முன்னதாக மார்ச் மாதத்திலும் ஏர்டெல் மற்றும் வோடாபோன், இந்த இரண்டு பெரு நிறுவனங்களும் 151 லட்சம் மற்றும் 145 லட்சம் என்ற அளவில் தன் வாடிக்கையாளர்களை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜியோ மார்ச் மாதத்தில் 94 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை பெற்றிருந்தது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்