ரிலையன்ஸ் நிறுவனம் சார்பாக புதிதாக அறிமுகம் செய்யப்படவுள்ள ‘ஜியோ பிரவுஸர்' (Jio Browser) தற்போது ஆண்ட்ராய்டு போன்களில் பதிவுறக்கம் செய்துகொள்ள முடியும். இந்த புதிய பிரவுஸர் பயன்படுத்த மிகவும் எளிதாகவும் வேகமாகவும் இருக்கும் என்ற தகவல் வெளியாகிவுள்ள நிலையில் தற்போது 8 இந்திய மொழிகளில் பயன்பாட்டிற்க்கு வரவுள்ளது. மேலும் இந்த பிரவுசரில் மற்ற பிரவுசர்கள் போல இன்காக்னிட்டோ மோட் மற்றும் நண்பர்களுடன் பகிர்வதற்க்கான வசதியும் அடங்கியுள்ளது. டவுண்லோட் மேனேஜர் மற்றும் வீடியோக்களை பதிவிறக்கம் செய்யும் வசதிகளுடன் இந்த பிரவுசர் இணையத்தை கலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ பிரவுஸர்களில் ஆங்கில மொழி தானாக பதிந்து இருக்கும் நிலையில், இந்திய மொழிகளான தமிழ், கன்னடம், தெலுங்கு,பெங்காலி, மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, மற்றும் மராத்தி என 8 இந்திய மொழிகளில் தற்போது பயன்படுத்த முடிகிறது.
ஆங்கிலத்திலிருந்து நமக்கு விருப்பமுடைய மொழிக்கு செயலியை மாற்றிய பிறகு, அந்த பிரவுஸர் தானாகவே நமது விருப்பமுடைய மொழிகளுக்கு மற்ற எல்லா செயல்பாடுகளையும் மாற்றிவிடும். இதன் மூலம் மாற்றத்திற்குப் பிறகு வரும் செய்திகளும் தானாகவே விருப்பப்பட்ட மொழிகளுக்கு மாறிவிடும். குகூள், ஃபேஸ்புக் என அனைத்து தளங்களையும் நமக்கு விருப்பமுடைய மொழிகளில் பார்க்கும் வசதியும் இதில் உண்டு.
மேலும் இந்தியா மற்றும் உலக நாடுகளில் நடக்கும் செய்திகளையும் ‘யுசி பிரவுஸர் மற்றும் யுசி நியூஸ்' போன்று ஜியோ பிரவுஸரிலும் நம்மால் பார்க முடியும். மேலும் மை ஜியோ, புக் மை ஷோ, ஏஜியோ, என்.டி.டிவி, அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்டு போன்ற எல்லா தளங்களையும் இதில் பயன்படுத்த முடியும் என்று தகவல் வெளியாகிவுள்ளது.
குகூள் சர்சைப்போல் இதிலும் நாம் போனுடன் உரையாடுதல் நடத்தி ஒரு செயலைச் செய்ய முடிகிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தை பொறுத்தவரை ஜியோ பிரவுசரே மிகவும் வேகமாக செயல்படும் எனத் தெரிவித்தனர். 4.8 எம்.பி அளவுடைய இந்த செயலியை, குகூள் பிளேவில் பதிவிறக்கம் செய்ய முடியும். அண்ட்ராய்டு 5.0 லாலிபாப்பில் இயங்கும் இந்த பிரவுஸரை இதுவரை பயன்படுத்திய பயனாளர்கள் 4.4 ரேட்டிங் கொடுத்துள்ளனர். ஆனால் இன்னும் சில முக்கிய மேன்பாடுகள் இதில் செய்ய வேண்டியது இருக்கும் என்பது பலரதின் கருத்தாக இருக்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்