பிஎஸ்என்எல் ஜூன் 20 வரை இலவச பிராட்பேண்ட் இணைப்பை வழங்குகிறது!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 26 மே 2020 14:27 IST
ஹைலைட்ஸ்
  • புதிய நகர்வை அறிவிக்க புதுப்பிக்கப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது
  • இது அனைத்து பிஎஸ்என்எல் லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்கிறது
  • புதிய ப்ளானை கூடுதல் இன்ஸ்டாலேஷன் கட்டணங்கள் இன்றி வழங்குகிறது

ஒர்க் ஃப்ரம் ஹோம்-ஐ ஊக்குவிப்பதற்காக பிஎஸ்என்எல் முதலில் மார்ச் மாதத்தில் தனது "ஒர்க் @ ஹோம்" பிராட்பேண்ட் ப்ளானை அறிமுகப்படுத்தியது

ஒர்க் @ ஹோம் ப்ளானின் கீழ், BSNL ஜூன் 20 வரை இலவச பிராட்பேண்ட் இணைப்பை வழங்குகிறது. இந்த ப்ளான் ஆரம்பத்தில் ஒரு மாதத்திற்கு தொடங்கப்பட்டாலும், இந்த முறை ப்ளானின் வேலிடிட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் லேண்ட்லைன் இணைப்பு கொண்ட வாடிக்கையாளர்களுக்கு இலவச பிராட்பேண்ட் இணைப்பு கிடைக்கும். ஊரடங்கு காரணமாக வீட்டிலிருந்து வேலை செய்வோர் அதிகம் உள்ளனர். அதனால்தான் அரசுக்கு சொந்தமான நிறுவனம் இந்த சிறப்பு வசதியைக் கொண்டு வந்துள்ளது.

இந்த சலுகையில் நீங்கள் இலவச பிராட்பேண்ட் இணைப்புடன் 10Mbps வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம். இந்த ப்ளான் 5 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த டேட்டா முடிந்ததும் வேகம் 1Mbps ஆக குறைக்கப்படும்.

அதே நேரத்தில், ப்ரீபெய்ட் மொபைல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,399 என்ற புதிய ப்ரீபெய்ட் ப்ளானை பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ப்ளானின் வேலிடிட்டி 600 நாட்கள் ஆகும். புதிய ப்ளான் நிறுவனத்தின் சத்தீஸ்கர் வட்டம் ட்விட்டர் கணக்கிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளான் ஒரு நாளைக்கு 250 நிமிட குரல் அழைப்புகளை அனுமதிக்கிறது. டேட்டா பலன்கள் வசதி இதில் இல்லை. நாடு முழுவதும் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இந்த ப்ளானைப் பெறலாம். இலவச பிஎஸ்என்எல் ட்யூன்களை முதல் 60 நாட்களுக்குப் பயன்படுத்தலாம்.



Is Redmi Note 9 Pro Max the best affordable camera phone in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts or RSS, download the episode, or just hit the play button below.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iQOO 15 Apex வண்ண விருப்பம் வெளியிடப்பட்டது, ஏப்ரல் 1 அன்று இந்தியாவில் அறிமுகம்
  2. ரியல்மி C100 5G: ஏப்ரல் அறிமுகம்!7000mAh பேட்டரி, 50MP கேமரா மற்றும் அதிரடி அம்சங்களுடன் கசிந்த விலை விவரங்கள்
  3. மெட்டா - ரே-பான் ஆப்டிக்ஸ் ஸ்மார்ட் கண்ணாடி அறிமுகம்: விலை மற்றும் சிறப்பம்சங்கள்
  4. அமெரிக்காவில் உள்ள கூகுள் AI அல்ட்ரா சந்தாதாரர்களுக்கு ஜிமெயிலின் 'AI இன்லாக்ஸ்' அம்சம் அறிமுகம்
  5. பிக்சல்10 ப்ரோவை விட மெல்லிய பெசல்களைக்(Bezels) கூகுள் பிக்சல்11 ப்ரோ கொண்டிருக்கலாம்: கசிந்த ரெண்டர்கள் தகவல்
  6. ரெட்மி 15A 5G vs ரியல்மி P4 ​​லைட் 5G vs சாம்சங் கேலக்ஸி M17e 5G: இந்தியாவில் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகள்
  7. iOS 26.5 பீட்டா 1 வெளியீடு: ஆப்பிள் மேப்ஸ்-ல் விளம்பரங்கள் மற்றும் RCS மெசேஜ் என்க்ரிப்ஷன் வசதி அறிமுகம்
  8. லாவா போல்ட் N2 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்: 5,000mAh பேட்டரி மற்றும் 50MP கேமராவுடன் பட்ஜெட் விலையில் வெளியீடு
  9. கூகுள் பிக்சல் 11 கசிவு: சிறிய வடிவமைப்பு மாற்றங்களுடன் வெளியாகிறது - சிஏடி (CAD) ரெண்டர்கள் மூலம் தகவல்
  10. ஐபோன் 18 ப்ரோ: சிறிய அளவிலான 'டைனமிக் ஐலேண்ட்' வசதியுடன் வெளியாகலாம் - தகவல்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.