“5ஜிபி இலவச இணைய சேவை!”- மீண்டும் அதிரடியில் இறங்கும் பி.எஸ்.என்.எல்

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 17 ஜூலை 2019 16:22 IST
ஹைலைட்ஸ்
  • பி.எஸ்.என்.எல் சென்னை தளத்தில் இது குறித்த தகவல் பதிவிடப்பட்டுள்ளது
  • 5ஜிபி டேட்டா, 10 எம்.பி.பி.எஸ் வேகத்தில் கொடுக்கப்படும்
  • அதன் பிறகு 1 எம்.பி.பி.எஸ் வேகத்தில் இணைய சேவை இருக்கும்

5ஜிபி டேட்டாவுக்கு, 10 எம்.பி.பி.எஸ் வேகமும், அதன் பிறகு 1 எம்.பி.பி.எஸ் வேகமும் கிடைக்கும். 

பி.எஸ்.என்.எல் நிறுவனம் தனது ‘5ஜிபி இலவச இணைய சேவை'-ஐ மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. தனது லேண்டுலைன் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சிறப்புச் சலுகை செல்லுபடியாகும் என்று தெரிவித்துள்ளது பி.எஸ்.என்.எல். இந்த சேவை கடந்த மார்ச் மாதம் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. பி.எஸ்.என்.எல் வாடிக்கையாளர்கள், ப்ராட்பேண்ட் இணைப்பு சேவை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள இந்த சிறப்பு சேவை அளிக்கப்படுகிறது. இந்த 5ஜிபி இலவச டேட்டா சேவைக்கு, 10 எம்.பி.பி.எஸ் வேகத்தை பி.எஸ்.என்.எல் வழங்கும். அதைத் தாண்டும் பட்சத்தில் 1 எம்.பி.பி.எஸ் இணைய வேகத்தைப் பெற முடியும். 

இது குறித்து பி.எஸ்.என்.எல் சென்னை தளத்தில், “இந்த 5ஜிபி இலவச இணைய சேவை என்பது இந்தியாவில் இருக்கும் அனைத்து வாடிக்கையாளர்களும் பொருந்தும். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இருப்பவர்களுக்கு இந்த புதிய சேவையைப் பெற முடியாது. 5ஜிபி டேட்டாவுக்கு, 10 எம்.பி.பி.எஸ் வேகமும், அதன் பிறகு 1 எம்.பி.பி.எஸ் வேகமும் கிடைக்கும். 

இந்த குறுகிய கால சேவை என்பது பி.எஸ்.என்.எல் லேண்டு லைன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வரும் ஜூலை 31 ஆம் தேதி வரை கிடைக்கும். 

இந்த இலவச சேவைக்கான இன்ஸ்டாலேஷன் கட்டணம் எதவும் பெறப்படாது. அதே நேரத்தில் வாடிக்கையாளர்கள், சொந்த மோடம்-ஐ வைத்திருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த மார்ச் மாதம், முதன்முறையாக இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டபோது, அந்த மாதத்தின் 31 ஆம் தேதி வரை, இலவச சேவை வழங்கப்பட்டது. அதன் பிறகு, இரண்டாவது முறையாக தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Bharat Sanchar Nigam Limited, BSNL
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Oppo A7 Pro Max-ல் 10,000mAh பேட்டரி, Snapdragon 4 Gen 5 SoC மற்றும் பல அம்சங்கள் இடம்பெற வாய்ப்பு
  2. Vivo X300 E அறிமுக தேதி உறுதி செய்யப்பட்டது; முன்-பதிவு சலுகைகள் மற்றும் முக்கிய அம்சங்கள் வெளிவந்தன
  3. 2026-இல் உங்கள் ஜியோ (Jio) eSIM-ஐ எவ்வாறு ஆக்டிவேட் செய்வது: ஒரு ஸ்டெப்-பை-ஸ்டெப் வழிகாட்டி
  4. இந்தியாவில் Apple Music, Apple One சந்தா கட்டணங்கள் உயர்வு; தனிநபர் திட்டம் இப்போது ரூ. 139-ல் தொடங்குகிறது
  5. சிறந்த AI கேமரா அம்சங்களைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள்: Samsung Galaxy S26 Ultra, Pixel 10 மற்றும் பல
  6. இந்தியாவில் ரூ. 40,000-க்குள் கிடைக்கும் சிறந்த மொபைல்கள்: Redmi Turbo 5 முதல் OnePlus Nord CE 6 வரை
  7. ஒன் யுஐ 9 மூலம் சாம்சங் எஸ்25 போன்களில் கேலக்ஸி எஸ்26-இன் ஹாரிசாண்டல் லாக் கேமரா அம்சம் வர வாய்ப்பு
  8. கூகுள் பிக்சல் 11ஏ (Google Pixel 11a) குறியீட்டுப் பெயர் போன் செயலியில் கண்டறியப்பட்டதாகத் தகவல்
  9. மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ போனுக்கு ரூ. 2,450 தள்ளுபடி: 6,000mAh பேட்டரி கொண்ட போன் குறைந்த விலையில் கிடைக்கிறது
  10. ரியல்மி 16டி 5ஜி போனுக்கு ரூ. 3,500 தள்ளுபடி: 8,000mAh பேட்டரி கொண்ட போனை குறைந்த விலையில் வாங்குங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.