நோக்கியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ஏர்டெல்!

நோக்கியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ஏர்டெல்!

Photo Credit: Reuters

நோக்கியா பங்குகள் இந்த மாதத்தில் 12.5 சதவீதம் உயர்ந்தன என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஹைலைட்ஸ்
  • நோக்கியா 3 லட்சம் ரேடியோ யூனிட்களை வழங்கும்
  • ஏர்டெல் நோக்கியா தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 5ஜி ரோல்அவுட்டை தயாரிக்கும்
  • சுமார் ரூ.7,636 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது
விளம்பரம்

நெட்வொர்க் திறனை அதிகரிக்க, ஏர்டெல் நோக்கியாவுடன் மிகப்பெரிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதை நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. ஒரு சர்வதேச அறிக்கையின்படி, ஏர்டெல் ஒரு பின்னிஷ் நிறுவனத்துடன் 1 பில்லியன் (சுமார் ரூ.7,636 கோடி) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக, நிறுவனம் 2022-க்குள் நாடு முழுவதும் 3 லட்சம் புதிய வானொலி யூனிட்டுகளை வழங்கும்.

Nokia தலைவர் ராஜீவ் சூரி, இந்த ஒப்பந்தம் "உலகின் முன்னணி தொலைத் தொடர்பு சந்தைகளில் ஒன்றின் எதிர்கால தகவல்தொடர்புக்கு முக்கிய பங்கு வகிக்கும்" என்றார்.

உலகின் இரண்டாவது பெரிய தொலைத் தொடர்பு சந்தையாக இந்தியா உள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில், 92 கோடி வாடிக்கையாளர்கள், மொபைல் போன்களைப் பயன்படுத்துவார்கள் என்று நோக்கியா மதிப்பிடுகிறது. ஆன்லைன் உலகின் பிரபலத்தின் அதிகரிப்புடன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

சமீபத்தில், நோக்கியா 5G சந்தையில் Huawei மற்றும் Ericsson ஆகியோரிடமிருந்து நிறைய அழுத்தங்களுக்கு உள்ளாகியது. இந்த ஒப்பந்தத்தின் பின்னர் பின்னிஷ் நிறுவனம் நிவாரணம் பெறும். நோக்கியா பங்குகள் இந்த மாதத்தில் 12.5 சதவீதம் உயர்ந்தன என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Nokia, Airtel, 5G, Network Operator
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.
Trending Products »
Latest Tech News »