புதிய iPad (2019) இறுதியாக இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. மேலும் ஆன்லைன் சேனல்களான பிளிப்கார்ட் மற்றும் அமேசான் இரண்டிலும் விற்பனைக்கு கிடைக்கிறது. iPad (2019) கடந்த மாதம் iPhone 11 மற்றும் Apple Watch Series 5-ஐ Cupertino-வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இரண்டு தயாரிப்புகளும் ஏற்கனவே இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில், iPad (2019) ஒரு மாதத்திற்கும் மேலாக கிடைக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 2018 iPad மாடலை, புதிய 10.2-inch iPad மாற்றியமைக்கிறது. மேலும், iPadOS மற்றும் A10 Fusion SoC-யால் இயங்குகிறது.
நினைவுகூர, iPad (2019) இரண்டு மாடல்களில் அறிமுகப்படுத்தப்பட்டது - Wi-Fi only மற்றும் Wi-Fi + Cellular மாடல். Wi-Fi only, 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ. 29,900, மற்றும் 128 ஜிபி மாடலின் விலை ரூ. 37,900-க்கு வருகிறது. Wi-Fi + Cellular 32 ஜிபி மாடலின் விலை ரூ. 40,900-யாகவும், 128 ஜிபி மாடலின் விலை ரூ. 48.900-யாகவும் விலையிடப்பட்டுள்ளது. குறிப்பிட்டுள்ளபடி, இது இப்போது பிளிப்கார்ட் மற்றும் அமேசானில், Silver, Space Grey மற்றும் Gold நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.
பிளிப்கார்ட் no-cost EMI ஆப்ஷன், எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளில் 10 சதவீதம் உடனடி தள்ளுபடி மற்றும் பிளிப்கார்ட் ஆக்ஸிஸ் வங்கி கடன் அட்டைகளில் 5 சதவீதம் அண்லிமிடெட் கேஷ்பேக் ஆகியவற்றை வழங்குகிறது. எக்ஸ்சேஞ் தள்ளுபடி, no-cost EMI ஆப்ஷன் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் அட்டைகள், டெபிட் அட்டைகள் மற்றும் கிரெடிட் / டெபிட் EMI பரிவர்த்தனைகளுடன் 1,750 ரூபாய் உடனடி தள்ளுபடியை வழங்குகிறது அமேசான்.
விவரக்குறிப்புகள்:
iPad (2019)-ஐ iPadOS இயக்குகிறது. மேலும் 10.2-inch (2160x1620 pixels ) Retina IPS display உடன் 264ppi pixel density மற்றும் 500-nit peak brightness ஆகிய அம்சங்களுடன் வரும். இது M10 coprocessor உடன் Apple A10 Fusion SoC-யால் இயக்கப்படுகிறது. இது 32 ஜிபி மற்றும் 128 ஜிபி என இரண்டு சேமிப்பு விருப்பங்களில் கிடைக்கிறது.
கேமராக்களைப் பொறுத்தவரை, இது f/2.4 aperture உடன் 8 மெகாபிக்சல் பின்புற கேமராவை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இது f/.2 aperture உடன் 1.2 மெகாபிக்சல் கேமராவைத் தாங்கி நிற்கிறது. Apple Pencil (first generation), features stereo speakers மற்றும் dual microphones-ஐ iPad ஆதரிக்கிறது. iPad (2019)-ல் இணைப்பு விருப்பங்களில் Wi-Fi 802.11ac மற்றும் Bluetooth v4.0 ஆகியவை அடங்கும். வழக்கம்போல GPS மற்றும் LTE connectivity-ஐ Wi-Fi + Celluar வழங்குகிறது. இந்த மாதிரி Nano-SIM card slot மற்றும் eSIM tech மூலமாக Wi-Fi calling-ஐ வழங்குகிறது.
iPad (2019), 32Whr பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது Wi-Fi மூலம் 10 மணி நேரம் வளைதளத்தில் செலவிடவும், cellular network-ல் 9 மணி நேரம் செலவிடவும் வழங்கப்படுகிறது. போர்டில் உள்ள சென்சார்களில் கீழே Touch ID fingerprint sensor, three-axis gyroscope, accelerometer, ambient light sensor, digital compass மற்றும் barometer ஆகியவை அடங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்