Photo Credit: Mobzine.ro
ஹூவாய் மேட்பேட் டி 8, நீல நிறத்தில் விற்பனைக்கு வரும்
இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களுடன் புதிய டேப்லெட்டை ஹவாய் அறிமுகப்படுத்தியுள்ளது. - ஹவாய் மேட்பேட் டி 8. இப்போதைக்கு, சீன நிறுவனம் இந்த டேப்லெட்டை ருமேனியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நீல டேப்லெட் டிஸ்ப்ளேவைச் சுற்றி ஒப்பீட்டளவில் பரந்த பெசல்கள் உள்ளது. டேப்லெட்டின் பின்புறத்தில் ஒரே ஒரு கேமரா மட்டுமே உள்ளது. ஹூவாய் ஜூன் முதல் இந்த டேப்லெட்டை விற்பனை செய்யத் தொடங்கும்.
Huawei MatePad T8 விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.8,400 ஆகும். இந்த டேப்லெட் ஜூன் முதல் ருமேனியாவில் நீல நிறத்தில் விற்பனைக்கு வரும். பல ஆன்லைன் ஸ்டோர்களில் இருந்து முன்பதிவு செய்யலாம்.
ஹூவாய் மேட்பேட் டி 8 நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு உடன் EMUI 10-ல் இயக்கும். இந்த டேப்லெட்டில் 8 அங்குல எச்டி + டிஸ்ப்ளே உள்ளது. இது மீடியாடெக் எம்டிகே 8768 சிப்செட், 2 ஜிபி ரேம் உடன் வருகிறது. டேப்லெட் 16 ஜிபி மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜில் கிடைக்கும்.
ஹவாய் மேட்பேட் டி 8-ன் உள்ளே 5,100 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இந்த டேப்லெட்டை ஒரு முறை சார்ஜ் செய்தால் 12 மணிநேர வீடியோவைப் பார்க்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்