இந்திய இசை நிறுவனங்களுடன் இணைந்த ஃபேஸ்புக்!

விளம்பரம்
Written by Indo-Asian News Service மேம்படுத்தப்பட்டது: 14 மார்ச் 2019 16:46 IST

விரைவில் இன்னும் பல இசை தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளதாக தங்களது பதிவில் குறிப்பிட்டுள்ளது ஃபேஸ்புக்

இந்தியாவின் முன்னணி பாடல்களை தயாரிக்கும் நிறுவனங்களுடன் இணைந்து இனி செயல்படப்போவதாக ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது.

இந்த இணைதலின் மூலம் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வாடிக்கையாளர்கள், தாங்கள் இடும்  கமென்ட்ஸ்களில் இனி பாடல்களையும் பயன்படுத்த முடியும்.

டி-சீரிஸ் மியுசிக், ஜீ மியுசிக் மற்றும் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் போன்ற நிறுவனங்களுடன் இணைவதன் மூலம் இந்தியாவில் இருக்கும் சுமார் 300 மில்லியன் ஃபோஸ்புக் பயனர்களுக்கு தங்களது விருப்பமான பாடல்களை ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட முடியும்.

'மக்கள் இனி தங்களது வீடியோக்களில் விருப்பப்பட்ட பாடல்களை இணைக்க முடியும். இதன் மூலம் ஒருவரின் நினைவுகளை இன்னும் உணர்ச்சிபூர்வமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஃபேஸ்புக் மூலம் பகிற முடிகிறது' என மனிஷ் சோப்ரா, ஃபேஸ்புக் இந்தியாவின் பார்ட்னர்ஷிப் இயக்குநர் தெரிவித்தார்.

சுமார் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் ஃபேஸ்புக் நிறுவனம் இதுபோன்ற இசை நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து செயல்படுகிறது.

Advertisement

விரைவில் இன்னும் பல இசை தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளதாக தங்களது பதிவில் குறிப்பிட்டுள்ளது ஃபேஸ்புக்.

இந்தக் கூட்டணி குறித்து யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆனந்த குர்னானியிடம் கேட்டபோது, அவர், 'இந்த ஃபேஸ்புக் இணைப்பின் மூலம் மக்களுக்கு புதிய பாடல்களை கேட்கவும், பாடல்களை பயன்படுத்தி தங்களது கருத்துகளை பகிறவும் முடியும்' என கூறினார்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Facebook, Zee Music, Instagram
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.