சீனாவின் Xiaomi நிறுவனம், இந்திய ஸ்மார்ட் போன் சந்தையில் மிகப் பெரிய மார்கெட்டைப் பிடித்திருக்கும் நிலையில், பிற மின்னணு சாதனங்களை வெளியிடுவதிலும் ஆர்வம் காட்டி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, Mi ஒயர்லெஸ் மௌஸ், யூத் எடிஷனை வெளியிட்டுள்ளது Xiaomi. தற்போதைக்கு இந்த மௌஸ் சீன சந்தைகளில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிகிறது. jd.com மூலம் இந்த மௌஸை வாங்க முடியும். இதன் விலை 49 ரென்மின்பி என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் 500 ரூபாயாக இருக்கும். இதுவரை Xiaomi நிறுவனம் வெளியிட்டதிலேயே இது தான் மிகக் குறைந்த விலையிலான ஒயர்லெஸ் மௌஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒயர்லெஸ் மௌஸ் பிடிப்பதற்கும், வேலை செய்வதற்கும் ஏதுவான வகையில் டிசைன் செய்யப்பட்டு உள்ளது. இந்த மௌஸின் எண், WXSB01MW ஆகும். 2.4GHz கொண்ட ப்ளூடூத் வசதியுடன் இந்த சாதனம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. பல அடிப்படைகளை சரியாகச் செய்துள்ளதால் மக்கள் மத்தியில் இந்த சாதனம் நன்கு பிரபலமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Xiaomi நிறுவனம் தனது முதல் ஒயர்லெஸ் மௌஸை கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியிட்டது. அதன் விலை 700 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்