ஜியோமியில் விரைவில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 கொண்ட ஸ்மார்ட்போன்கள்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 23 அக்டோபர் 2018 15:42 IST
ஹைலைட்ஸ்
  • நேற்று குவால்காம் ஸ்னாப்டிராகன் 675 குறித்த தகவல்களை வெளியிட்டது.
  • ஜியோமி இந்தியாவின் தலைவர் குவால்காம் மாநாட்டில் அறிவிப்பினை வெளியிட்டார்.
  • எப்போது விற்பனைக்கு வரும் என்பது குறித்த தகவல்களை ஜெயின் வெளியிடவில்லை.

குவால்காம் 4ஜி, 5ஜி மாநாட்டில் இந்தியாவில் தங்களது நிறுவனத்தின் அபார வளர்ச்சி குறித்து ஜெயின் விளக்கினார்.

நேற்று நடைபெற்ற குவால்கம் 4ஜி, 5ஜி மாநாட்டில், ஜியோமி இந்தியாவின் துணை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெயின் தங்களது நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை வெளியிட்டார். கடந்த ஆகஸ்ட் மாதம் ஸ்நாப்டிராகன் 670 அறிமுகப்படுத்தும்போதே ஸ்நாப்டிராகன் 675 எஸ்ஓசி பற்றி அறிவிக்கப்பட்டது. 

குவால்காம் 4ஜி, 5ஜி மாநாட்டில் இந்தியாவில் தங்களது நிறுவனத்தின் அபார வளர்ச்சி குறித்து ஜெயின் குமார் பேசினார். சீனா நிறுவனமான ஜியோமி கடந்த 2014ம் ஆண்டு இந்தியாவிற்குள் நுழைந்தது. அந்த ஆண்டிலேயே 100,000 சாதனங்களையும், 2017ல் 9.2 மில்லியன் சாதனங்களையும் விற்பனை செய்து சாதனை படைத்ததுள்ளதாக கூறியுள்ளார். 

மேலும், கூகுள் தளத்தில் ரெட்மி போன்களை ஹாலிவுட் பிரபலங்களான டாம் குரூஸ், ஏஞ்சலினா ஜூலி, ராபர்ட் டவுனி ஜே.ஆர், மற்றும் கிம் கார்திஷியன் தேடியுள்ளதாக கூறினார். 

ஸ்னாப்டிராகன் 675 எஸ்.ஓ.சியும் 11என்.எம் எல்.பி.பி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 670யுடன் ஸ்னாப்டிராகன் 675 எஸ்.ஓ.சியை ஒப்பிடும் போது செல்போன் கேம்களின் வேகம் 30 சதவீதம் அதிகமாக இருக்கும். வலைதளங்களின் வேகம் 35 சதவீதமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Qualcomm Snapdragon 675, Qualcomm, Xiaomi
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Poco X8 Pro Series – வெளியீட்டு தேதி, இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள்
  2. ChatGPT-இல் Chats-ஐ Delete மற்றும் Archive செய்வது எப்படி? – படிப்படியாக நீக்கும் முறைகள் இங்கே
  3. Realme 16T 5G, P4R 5G இந்தியாவில் விரைவில் அறிமுகம் – நிறங்கள், ஸ்டோரேஜ் தகவல் வெளியீடு
  4. இந்த வாரத்தின் சிறந்த OTT வெளியீடுகள் (மார்ச் 9 - மார்ச் 15): என்னென்ன படங்கள்ன்னு பாருங்கள்
  5. Samsung Galaxy M17e 5G இந்திய விலை லீக் – மார்ச் 17 அறிமுகத்திற்கு முன் தகவல்
  6. Motorola அறிமுகப்படுத்திய Motorola Edge 70 Fusion+ – Triple Camera, 5,200mAh பேட்டரி
  7. iPhone Fold-ல் iPad போன்ற UI, Split-Screen Apps ஆதரவு வரலாம்
  8. James Webb Space Telescope-ன் புதிய கண்டுபிடிப்பு: Jupiter ஆரோராவில் Io, Ganymede தடயங்கள்
  9. Meta Platforms மோசடி தடுப்பு கருவிகளை விரிவுபடுத்துகிறது – WhatsApp-ல் புதிய Device Link எச்சரிக்கை
  10. Xiaomi 17 Ultra இந்தியாவில் அறிமுகம் – 200 மெகாபிக்சல் Leica கேமரா, தொடர்ச்சியான Optical Zoom: விலை மற்றும் அம்சங்கள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.