கிறிஸ்துமஸ் விற்பனை; நம்.1 எம்.ஐ ஃபேன் சேல்! - எந்தெந்த போன்களுக்கு எவ்வளவு தள்ளுபடி?

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 17 டிசம்பர் 2018 17:11 IST
ஹைலைட்ஸ்
  • நம்.1 எம்.ஐ ஃபேன் சேலை சியோமி நிறுவனம் வழங்குகிறது.
  • சியோமி போன்களுக்கு பல்வேறு தள்ளுபடியை வழங்குகிறது.
  • இந்த தள்ளுபடி விற்பனையில் பேடீம் கேஷ் பேக் தள்ளுபடியும் உள்ளடங்கும்.

சியோமி நம்.1 எம்.ஐ ஃபேன் சேலானது டிச.19 முதல் டிச.21 வரை நடைபறுகறிது.

சியோமி நிறுவனம் கிறிஸ்துமஸை முன்னிட்டு எம்.ஐ ஃபேன்ஸூக்கு நம்.1 எம்.ஐ ஃபேன் சேலை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இந்த விற்பனையானது டிச.19 முதல் டிச.21 வரை நடைபெறுகிறது.

இந்த விற்பனையில், ரெட்மி y2, எம்.ஐ A2 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி விற்பனையானது எம்.ஐ டிவிகளுக்கும் வழங்கப்படுகிறது.

மேலும் இந்த தள்ளுபடி விற்பனையில் கூகுள், மொபிக்விக் மற்றும் பேடீம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து, கேஷ்பேக் சலுகைகளையும் வழங்குகிறது.

நம்.1 எம்.ஐ ஃபேன் சேலில் ரெட்மி y2, ரூ.8,999 கிடைக்கிறது. இதன் அறிமுக விலையே ரூ.9,999 ஆக இருந்தது. எம்.ஐ A2 போனுக்கு ரூ.1000 வரை தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.14,999க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், கடந்த மாதம் ரெட்மி நோட் 6 ப்ரோ வந்ததை தொடர்ந்து, ரெட்மி நோட் 5 ப்ரோ விலை குறைக்கப்பட்டுள்ளது. இது மேலும் தள்ளுபடி விலையில் தற்போது கிடைக்கிறது.

சியோமி நிறுவனம் பேடீம் நிறுவமனத்துடன் கூட்டு சேர்ந்து ரூ.300 வரை கேஷ்பேக் சலுகைகளை வழங்குகிறது. இந்த சலுகையானது ரெட்மி y2, ரெட்மி நோட் 6 ப்ரோ, எம்.ஐ A2, போகோ எப்1, ரெட்மி 6, ரெட்மி 6A, ரெட்மி ப்ரோ, ரெட்மி நோட் 5 ப்ரோ உள்ளிட்ட மாடல்களுக்கு கிடைக்கிறது.

இந்த எம்.ஐ ஃபேன் சேலில் கிறிஸ்துமஸ் சிறப்பு கிஃப்ட் கார்டுகளும் வழங்கப்படுகிறது. மேலும் சியோமி போன்களுக்கு கேஸ்கள் மற்றும் கவர்கள் ரூ.79க்கு கிடைக்கிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi No 1 Mi Fan Sale, Xiaomi Mi Fan Sale, Xiaomi

குடியுரிமை ரோபோ. எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால், ஒரு மனிதர் பதிலளிப்பார்.

...மேலும்
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. ஜான் டெர்னஸ் தலைமையில் ஆப்பிளின் ஃபோல்டபிள் ஐபேட், AI சாதனங்கள் மற்றும் டச்ஸ்கிரீன் மேக்புக் அறிமுகத் திட்டம்
  2. விவோ X500 ப்ரோ மேக்ஸ்: 200MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ மற்றும் 50MP LOFIC கேமராவுடன் அறிமுகமாக வாய்ப்பு
  3. அறிமுகத்திற்கு முன் கீக்பெஞ்சில் ஷாவோமி 17T: டைமென்சிட்டி 8500 சிப் மற்றும் 12GB RAM விவரங்கள் கசிந்தன
  4. விவோ X போல்ட் 6-ல் 200MP கேமரா மற்றும் பெரிய பேட்டரி; ஷாவோமி மிக்ஸ் போல்ட் 6 வெளியீட்டுத் தகவல் கசிந்தது
  5. போக்கோ C81x 4G vs லாவா போல்ட் N2 ப்ரோ vs ஐடெல் ஜீனோ 100: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  6. உங்கள் ஆண்ட்ராய்டு போனில் அட்வான்ஸ்டு ப்ரொடெக்ஷனை எவ்வாறு இயக்குவது: ஒரு படிப்படியான வழிகாட்டி
  7. ரெட்மி A7 ப்ரோ 4G vs விவோ Y05 4G vs ரியல்மி P4 லைட் 4G: இந்தியாவில் விலை மற்றும் சிறப்பம்சங்கள் முழு ஒப்பீடு
  8. உங்கள் சாம்சங் போன் சீராக இயங்க அதனைத் தானாகவே மறுதொடக்கம் (Restart) செய்வது எப்படி?
  9. ஆண்ட்ராய்டின் நோட்டிஃபிகேஷன் பபிள்ஸ் அம்சத்திற்கான ஆதரவை வழங்கும் பணியில் வாட்ஸ்அப் ஈடுபட்டுள்ளது
  10. ஜியோ யூத் அண்ட் கேமிங் பிளான்: ஸ்னாப்சாட்+, ஃபேன்-கோடு மற்றும் ஜெமினி ப்ரோ அறிமுகம்: விலை, நன்மைகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.