Redmi Note 9: அறிமுகமான முதல் மாதத்திலேயே MIUI 12 சாப்ட்வேர் அப்டேட்!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 12 ஆகஸ்ட் 2020 11:15 IST
ஹைலைட்ஸ்
  • Redmi Note 9 ஸ்மார்ட்போனில் MIUI 12 அப்டேட் வழங்கப்பட்டுள்ளது
  • அப்டேட் வெர்ஷன் MIUI V12.0.1.0.QJOINXM
  • இந்த ஸ்மார்ட்போன் ஜூலையில் அறிமுகம் செய்யப்பட்டது

MIUI 12 அப்டேட் 538MB அளவு உள்ளது

ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் கடந்த ஜூலை மாதம் MIUI 11, ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் அறிமுகமான நிலையில், தற்போது MIUI 12க்கான அப்டேட் பெறத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. 

கடந்த வாரம் போகோ X2 ஸ்மார்ட்போனில் MIUI 12க்கான அப்டேட் வந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனிலும் MIUI 12 அப்டேட் V12.0.1.0.QJOINXM உடன் வரத் தொடங்கியுள்ளது. இந்த அப்டேட்டை பயனர் ஒரு ஸ்கிரீன்ஷாட் எடுத்து டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதன்படி, MIUI 12 அப்டேட் 538MB அளவு உள்ளது. இதில் அனிமேஷன்கள், ஃபுளோட்டிங் விண்டோஸ் மற்றும் சிஸ்டம் விசுவல்ஸ் அம்சங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு மற்றும் தனியுரிமை விதிமுறைகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 

MIUI 12 அப்டேட் பேட்ச் வாரியாக வெளியிடப்படுவதால், அனைத்து ரெட்மி நோட் 9 பயனர்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்காது. 

உங்கள் ரெட்மி நோட் 9 ஸ்மாரட்போனில் MIUI 12 அப்டேட் வந்துள்ளதா என்பதை சரிபார்க்க, Settings > About Phone > System update க்குச் சென்று பார்க்கவும்.


இந்தியாவில் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் கடந்த ஜூலை மாதம் MIUI 11 அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஆக்டா கோர் மீடியா டெக் ஹீலியோ ஜி 85 SoC பிராசசர் உள்ளது.  மேலும் 6 ஜிபி ரேம், பின்பக்கத்தில் நான்கு கேமராக்கள், சிங்கிள் ஹோல் பஞச் டிஸ்பிளே, 5,020mAh சக்தி கொண்ட பேட்டரி, 22.5W ஃபாஸ்ட் சார்ஜிங், 9W ரிவர்ஸ் சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. 


Is Redmi Note 9 the perfect successor to Redmi Note 8? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Good battery life
  • Powerful processor
  • Decent daylight camera performance
  • Bad
  • Average low-light camera performance
  • Bloated UI and spammy notifications
 
KEY SPECS
Display 6.53-inch
Processor MediaTek Helio G85
Front Camera 13-megapixel
Rear Camera 48-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 4GB
Storage 64GB
Battery Capacity 5020mAh
OS Android 10
Resolution 1080x2340 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Redmi Note 9, Redmi Note 9 update, Redmi Note 9 MIUI 12, Xiaomi
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.