ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் 'அட்டகாசமான' புதிய வேரியன்ட் அறிமுகம்!

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 11 ஆகஸ்ட் 2020 11:09 IST
ஹைலைட்ஸ்
  • மொத்தம் 5 வகையான கலர் வேரியன்ட் உள்ளன
  • பின்புறத்தில் மட்டும் நான்கு கேமராக்கள் வழங்கப்படுகிறது
  • புதிய வேரியன்டாக கோரல் ஆரஞ்சு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

ரெட்மி நோட் 8 கோரல் ஆரஞ்சு வேரியன்ட் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

கடந்தாண்டு ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு வருடத்துக்குப் பின்பு தற்போது கோரல் ஆரஞ்ச் என்ற வேரியன்ட் கொண்டு வரப்பட்டுள்ளது. 

ஷாவ்மி தரப்பில் கடந்த ஆண்டு ரெட்மி 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ஆண்டு ரெட்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களும் வந்து விட்டன. ஆனால்,  8 சீரிஸ்க்கு கிடைத்த வரவேற்பு 9 சீரிஸ்க்கு அவ்வளவாக கிடைக்கவில்லை. 

இந்த நிலையில், தற்போது ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆரஞ்சு நிறத்துடன் புதிய வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நோட் 8 ஸ்மார்ட்போன் கடந்த அக்டோபரில் அறிமுகம் செய்யப்படும் போது 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரி ஸ்மார்ட்போனின் விலை  ரூ. 14,999, 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி ஸ்மார்ட்போனின் விலை  ரூ. 15,999, 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி ஸ்மார்ட்போனின் விலை  ரூ. 17,999 என்று அறிமுகம் செய்யப்பட்டன.

பின்னர், ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்ந்தது. இதனால், ஸ்மார்ட்போன்களின் விலையும் அதிகரித்தது. அதன்படி, 6ஜிபி ரேம், 64ஜிபி மெமரி ஸ்மார்ட்போனின் விலை  ரூ. 15,999, 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி ஸ்மார்ட்போனின் விலை  ரூ. 16,999, 8ஜிபி ரேம், 128ஜிபி மெமரி ஸ்மார்ட்போனின் விலை  ரூ. 18,999 என்று விலை அதிகரித்தது. 

ரெட்மி நோட் 8 ப்ரோவின் சிறப்பம்சங்கள்

இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 10
திரை அளவு: 6.53 இன்ச்
பிராசசர்: மீடியாடெக் ஹூலியோ ஜி90 SoC 

கேமரா:
பின்புறத்தில்  64MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 2MP அல்ட்ரா மேக்ரோ லென்ஸ், 2MP டெப்த் சென்சார் கேமரா உள்ளன. இதே போல், முன்பக்கத்தில் 20MP  செல்ஃபி கேமரா உள்ளது.

மேலும், வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர், யுஎஸ்பி டைப் சி, 4,500 mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜர் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன. 


Is Redmi Note 9 the perfect successor to Redmi Note 8? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Great performance
  • Versatile cameras
  • Premium build quality
  • HDR display
  • Bad
  • Gets warm under load
  • Sub-par low-light video performance
 
KEY SPECS
Display 6.53-inch
Processor MediaTek Helio G90T
Front Camera 20-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 2-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 4500mAh
OS Android 9 Pie
Resolution 1080x2340 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iPhone 17e வருது! பட்ஜெட் ஐபோன்ல இப்போ மேக்சேஃப் சப்போர்ட்.. சிங்கிள் கேமராவோட தரமான சம்பவம் பண்ணப்போற ஆப்பிள்
  2. சாம்சங், ஐபோனுக்கே டஃப் கொடுக்க ஷாவ்மி ரெடி! Xiaomi 17 Ultra-வோட குளோபல் ரெண்டர்ஸ் லீக்.. அந்த 200MP ஜூம் வேற லெவல்
  3. பிக்சல் 10ஏ-ல இவ்வளவு சூப்பர் கலர்ஸா? லீக்கான 4 மாஸ் கலர்கள் இதோ! பிப்ரவரி 18-க்காக வெயிட்டிங்
  4. கனவு விலையில் Vivo V50 5G! Flipkart-ல் மெகா டிஸ்கவுண்ட்.. 6000mAh பேட்டரி, Zeiss கேமரா இப்போ இவ்வளவு கம்மி விலையிலா?
  5. இனி பிளாக்ஷிப் போன் பட்ஜெட் விலையில்! Samsung Galaxy S24 FE இப்போ Amazon-ல் செம சீப்.. மிஸ் பண்ணிடாதீங்க
  6. ஸ்மார்ட்போன் ஹிஸ்டரிலயே இப்படி ஒரு பேட்டரியா? 7,400mAh உடன் மிரட்டும் iQOO 15 Ultra! கேமர்களுக்கு இதுதான் இனி ஒரே சாய்ஸ்
  7. பிக்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்! Google Pixel 10a எப்போ வருது தெரியுமா? டிசைன் மற்றும் கலர் டீசர் ரிலீஸ்
  8. விவோவோட அடுத்த தரமான போன் ரெடி! Geekbench-ல் மிரட்டும் Vivo V70 Elite.. பட்ஜெட்ல ஒரு பிளாக்ஷிப் போனா?
  9. விலை குறைந்தது OnePlus 13! பிளிப்கார்ட்டில் ரூ.12,000 வரை சேமிக்க ஒரு சூப்பர் வாய்ப்பு. ஆஃபரை எப்படி பெறுவது?
  10. S26 Ultra-வோட புது கலர்ஸ் பார்த்தீங்களா? சாம்சங் ரசிகர்களுக்குப் பிடிச்ச அந்த ஒரு கலர் திரும்ப வருது! டிசைன்லயும் பெரிய மாற்றம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.