சியோமி இந்தியாவில் ரெட்மி நோட் 6 ப்ரோவினை அறிமுகப்படுத்த ஏற்கனவே தயாராகி இருந்தது. அந்த சமயத்தில் தாய்லாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை இந்தியாவில் ரூ.15,000லிருந்து ரூ.20,000க்குள் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் ரெட்மி 6 சீரிஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின், தற்போது ரெட்மி நோட் 6 ப்ரோ வெளியாகிறது.
ரெட்மி 6 சீரிஸில் ரெட்மி 6 ப்ரோ (ரூ. 10,999) பிரீமியம் வேரியண்ட் ஆகும். இதில் டிஸ்பிளே நாட்ச், பின்பக்கத்தில் டூயல் கேமிரா மேலும் பின்பக்கத்தில் ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் ஸ்கேனர் உள்ளது. ரெட்மி நோட் 6 ப்ரோவில் பெரிய டிஸ்பிளே, கேமாராக்களுக்கு இடையே நாட்ச், பின்பக்கத்திலும் இரண்டு கேமிராக்கள் அதோடு, ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரும் உள்ளது.
சியோமி ரெட்மி நோட் 6 ப்ரோவி விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ரெட்மி நோட் 5 ப்ரோ விலிருக்கும் அதே அம்சங்கள்தான் இதிலும் உள்ளன. இதன் விலை ரூ.15,000லிருந்து ரூ.20,000க்குள் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாய்லாந்தில் 4ஜிபி ரேம்/64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட போனின் விலை THB 6,990 (சுமார் ரூ.15,700)ஆகும். இந்தியாவில் 6ஜிபி ரேம்/64ஜிபி ஸ்டோரேஜ் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிளிப்கார்ட்டில் நவம்.23 ஆம் தேதியிலிருந்து விற்பனையாகும்.
இந்தியாவில் ரெட்மி 6 ப்ரோ 3ஜிபி ரேம்/32ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.10,999 ஆகும். 4ஜிபி ரேம்/64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ. 12,999 ஆகும். பிளிப்கார்ட் மற்றும் Mi.com தளத்தில் வாங்கலாம்.
சியோமி ரெட்மி 6 ப்ரோ (ரூ.10,999 ) MIUI 9.6வில் இயங்குகிறது. தற்போது MIUI 10 அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 6 ப்ரோ MIUI 10வில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெட்மி நோட் 6 ப்ரோவில் 6.26 இன்ச் டிஸ்பிளே உள்ளது. ரெட்மி 6 ப்ரோவில் 5.84 இன்ச் டிஸ்பிளே உள்ளது, இரண்டு போன்களிலும் டிஸ்பிளே நாட்ச் உள்ளது. 1080பி ரெசலியுஷன் கொண்ட டிஸ்பிளே, அது 19:9 என்ற வீதத்திலானது.
ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்நாப் டிராகன் 636 ப்ராசஸரைக் கொண்டது. ரெட்மி 6 ப்ரோ 625 ப்ராசஸரைக் கொண்டது. ரெட்மி 6 ப்ரோவில் 3ஜிபி ரேம்+32ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 4ஜிபி ரேம்+64ஜிபி ஸ்டோரேஜ் என இரு வேரியண்ட்களைக் கொண்டது. ரெட்மி நோட் 6 ப்ரோவில் 4ஜிபி ரேம்/64ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம்/ 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. இரு போன்களிலும் மைக்ரோSD கார்டினை பயன்படுத்திக் கொள்ளலாம். ரெட்மி 6 ப்ரோவில் மூன்று சிம்களுக்கான ஸ்லாட்டுகளுடன் மைக்ரோSD கார்டிற்கான ஸ்லாட்டும் உள்ளது.
இரு ஸ்மார்ட்போன்களிலும் டூயல் கேமரா செட்டப் உள்ளது. 12 மெகா பிக்சல் சென்சார் மற்றும் 5 மெகா பிக்சல் சென்சாராகும். ரெட்மி 6 ப்ரோவில் PDAFஉள்ளது.
எல்இடி ஃபிளாஷ் சப்போர்ட், ஏஐ மோட் மற்றும் f/2.2 aperture போன்றவை உள்ளன. ரெட்மி நோட் 6 ப்ரோவில் சிங்கிள் டோன் எல்.இ.டி பிளாஷ் மற்றும் மேலும் பல உள்ளன. ரெட்மி 6 ப்ரோவின் முன்பக்கத்தில் 5 மெகா பிக்சல் சென்சார் உள்ளது. ரெட்மி நோட் 6 ப்ரோவின் முன்பக்கத்தில் டூயல் கேமிராவைக் கொண்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்