Photo Credit: Amazon India
அமேசானில் சுதந்திர தின சிறப்பு தள்ளுபடி விற்பனை நடந்து வருகிறது. அமேசான் பிரைம் டே சேல் ஆஃபரை தவறவிட்டவர்களுக்கு இது ஒரு சிறந்த ஆஃபர் ஆகும். மேலும், அமேசான் பிரைம் டே சேல் என்பது பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சுதந்திர தின கொண்டாட்ட ஆஃபரில், யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஆஃபர் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் நடைபெறுகிறது.
அமேசான் சுதந்திர தின ஆஃபரில் ஸ்மார்ட்பேன்கள், லேப்டாப்கள், டிவிகள், அமேசான் தயாரிப்புகள் என நூற்றுக்கணக்கான பொருட்கள் ஆஃபரில் கிடைக்கின்றன. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு 1,500 ரூபாய் வரையில் கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 7T ஸ்மார்ட்போன் தற்போது அமேசான் சுதந்திர தின ஆஃபரில் பிரைம் டே சேலில் 35,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 39,999 ஆகும். SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், கட்டணமில்லா ஈஎம்ஐ வசதியும் உண்டு.
விலை: Rs. 35,999 (MRP Rs. 39,999)
OnePlus 7T Pro
பழைய ஸ்மர்ட்போன்களைப் பற்றிப் பேசுகையில், ஒன்பிளஸ் 7T ப்ரோ, 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் 43,999 ரூபாய்க்கு கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 53,999 ஆகும். பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 4,000 ரூபாய் வரையில் தள்ளுபடி உண்டு. 16,000 ரூபாய் வரையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் அறிவிக்கப்பட்டுள்ளது..
விலை: Rs. 43,999 (MRP Rs. 53,999)
Oppo Reno 4 Pro
ஒப்போ சமீபத்தில் அறிமுகப்படுத்திய ரெனோ 4 ப்ரோவும் அமேசான் ஆஃபரில் இடம்பெற்றுள்ளது. இது ஒரு புதிய ஸ்மார்ட்போன் என்பதால் நீங்கள் எதிர்பார்க்கும் தள்ளுபடி இருக்காது. அமேசான் பே வழியாக 3,000 கேஷ்பேக் ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ஒப்போ ரெனோ 4 ப்ரோவை 31,990 ரூபாய்க்கு (அசல் விலை ரூ .34,990) வாங்க முடியும். ரூ. 14,600 வரையில் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் உள்ளது.
விலை: Rs. 34,990 (MRP Rs. 37,990)
Samsung Galaxy S10
சாம்சங் கேலக்ஸி S10 இன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் தற்போது, சுதந்திர தின ஆஃபரில் 2020 விற்பனைக்கு அமேசானில் 44,999 ரூபாய்க்கு கிடைக்கிறது (அசல் விலை ரூ. 71,000). கேலக்ஸி எஸ் 10 டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு மற்றும் 10 மெகாபிக்சல் முன் கேமராவுடன் வருகிறது. இந்த தொலைபேசி சாம்சங்கின் எக்ஸினோஸ் 9820 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது 3,400 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது மற்றும் ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
விலை: Rs. 44,999 (MRP Rs. 71,000)
அமேசான் பிரத்யேக தயாரிப்பான கிண்டில் ரீடருக்கு பிரத்யேக ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. கிண்டில் ஓயாசிஸ் 10 ஜெனரேஷன் டிவைஸ்க்கு 3,000 ரூபாய் குறைக்கப்பட்டு, 21,999 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதன் அசல் விலை 24,999 ரூபாய் ஆகும்.
விலை: Rs. 21,999 (MRP Rs. 24,999)
HP 15.6-inch laptop
35 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் ஒரு சூப்பரான லேப்டாப் வாங்க விரும்புகிறீர்களா. அப்படி என்றால் இது தான் சரியான நேரம். அமேசானின் சுதந்திர தின ஆஃபரில் HP 15.6 இன்ச் லேப்டாப் வெறும் 34,990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதன் அசல் விலை 40,348 ரூபாய் ஆகும். இதில் 8ஜிபி ரேம், 256GB SSD, விண்டோஸ் 10 உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.
விலை: Rs. 34,990 (MRP Rs. 40,348)
Will Amazon, Flipkart offer blockbuster sales in 2020? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்