இந்தியாவில் அடுத்த வாரத்தில் மட்டும் நான்கு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளன. அவை என்னென்ன ஸ்மார்ட்போன்கள், என்ன சிறப்பம்சங்கள் இருக்கலாம் என்பது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.
மோட்டோ, ஒப்போ, ஷாவ்மி நிறுவனங்களிடம் இருந்து பட்ஜெட் ஸ்மார்ட்போன் பிரியர்களுக்கு ஏற்றவாறு ஒரே வாரத்தில் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகிறது.. இவற்றில் மோட்டோ மட்டும் இந்தியாவில் அதன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்கிறதா இல்லையா என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஒப்போ மற்றும் ஷாவமி நிறுவனம் முறையே ஒப்போ A53 2020 மற்றும் ரெட்மி 9 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கின்றன. இதே போல் ஜியோனி தரப்பிலும் ஜியோனி மேக்ஸ் என்ற ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது.
ரெட்மி பிரியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 27 ஆம் தேதி அறிமுகமாகிறது. இதில் பின்பக்கத்தில் டூயல் கேமரா, வாட்டர் டிராப் நாட்ச், ஆண்ட்ராய்டு 10, MIUI 12 உள்ளிட்ட அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், 5,000mAh சக்தி கொண்ட பேட்டரி அத்துடன் 10W ஃபாஸ்ட் சார்ஜர் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்போ தரப்பில் ஒப்போ A53 2020 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. இதன் விலை 15 ஆயிரம் ரூபாய்க்குள்ளாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 25 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போன் அறிமுமாகிறது. இதில், 6.5 இன்ச் அளவிலான திரை, ஆக்டாகோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 460 SoC பிராசசர், 16 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 5,000mAh சக்தி கொண்ட பேட்டரி 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட அம்சங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஒரிரு வருங்களுக்கு முன்பு ரெட்மிக்குப் போட்டியாக ஜியோனி வளர்ந்து வந்தது. இந்த நிறுவனம் தற்போதும் மீண்டும் புதுஎழுச்சியுடன் ஸ்மார்ட்போன்களைக் கொண்டு வர முயற்சிக்கிறது. அந்த வகையில், ஆகஸ்ட் 25 ஆம் தேதி ஜியோனி மேக்ஸ் என்ற பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிகம் செய்கிறது. இது வெறும் 6 ஆயிரம் ரூபாய்க்குள்ளாக மட்டுமே இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவில் மோட்டோரோலா தரப்பில் புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பின்பக்கத்தில் விரல் ரேகை சென்சார், டைப் சி போர்ட் இருப்பதாக டீஸ் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் பெயர், மாடல் விவரங்கள் தெரியவில்லை. இருப்பினும் மோட்டோ E7 பிளஸ் ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்