Xiaomi 14 Civi டாப்பு டக்கர்! தாறுமாறு தக்காளி சோறு!

விளம்பரம்
Written by Gadgets 360 Staff மேம்படுத்தப்பட்டது: 6 ஆகஸ்ட் 2024 13:29 IST
ஹைலைட்ஸ்
  • செயற்கை நுண்ணறிவால் இயங்கும் எடிட்டிங் கருவிகள்
  • 67வாட் ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது
  • இது குரூஸ் புளூ, மேட்சா கிரீன் மற்றும் ஷேடோ பிளாக் வண்ணங்களில் வருகிறது

குறைந்த விலையில் அதிகப்படியான ஸ்மார்ட்போன்களை வெளியிடும் ஜியோமி நிறுவனம், இந்தாண்டு அதிக விலையில் உயர்தரமான Xiaomi 14 Civi செல்போன் மாடலை அறிமுகப்படுத்தி உள்ளது. Civi என்றால் சினிமாடிக் விஷன்(Cinematic Vision) என்பதன் சுருக்கமாகும்.  OnePlus 12R மற்றும் Samsung Galaxy A55 போட்டியாக இந்த மாடல் இருக்கும் என எதிர்பார்க்கலாம். இதுவரை குறைந்தவிலை செல்போன்களில் கவனம் செலுத்தி வந்த ஜியோமி, இப்போது மற்ற பெரிய நிறுவனங்கள் போலவே அதிகவிலையில் தரமான செல்போன்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற முடிவில் இறங்கியுள்ளது. 


Xiaomi 14 Civi வடிவமைப்பு: 

  • 157.20mm நீளம், 72.77mm அகலம், 7.45mm தடிமனுடன் அழகாக இருக்கிறது
  • எடை - 179.3 கிராம்


நிறங்கள் - குரூஸ் ப்ளூ, மேட்சா கிரீன் மற்றும் ஷேடோ பிளாக் என மூன்று நிறத்தில் கிடைக்கிறது. Xiaomi 14 Civi நிறுவனத்தின் பிரீமியம் 14 தொடரின் ஒரு பகுதியாகும். அதாவது நீங்கள் இந்த செல்போனில் உயர்தரத்தை எதிர்பார்க்கலாம். மெட்டல் பாடியுடன் வந்துள்ளது. 6.55-இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. 


கேமரா சென்சார்களை கொண்ட லைக்கா கேமரா ரிங் சிறப்பபாக உள்ளது. அனைத்து பட்டன்களும் வலது பக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஒரு கையால் பயன்படுத்தப்படும் போது விரல்களில் இயக்க நன்றாக இருக்கும். ஐஆர் பிளாஸ்டர் மேல் பேனலில் அமைந்துள்ளது. அதே சமயம் சார்ஜ் செய்வதற்கான டைப்-சி போர்ட் கீழ் பேனலில் உள்ளது. இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் அமைப்பு அற்புதமாக இருக்கிறது. 


Xiaomi 14 Civi டிஸ்ப்ளே


Xiaomi 14 Civi டிஸ்பிளே பார்க்க சிறிதாக தெரிந்தாலும் மிக வலிமையானது


6.55-இன்ச் குவாட் Curved AMOLED டிஸ்ப்ளே


120Hz புதுப்பிப்பு வீதம்


3000 நிட்ஸ் உச்ச பிரகாசம் தருகிறது. 


இது தவிர டால்பி விஷன், HDR10+, 460PPI மற்றும் TÜV Rheinland Low Blue Light வசதிகளை கொண்டுள்ளது. IP68 மதிப்பீட்டை மட்டும் பெறவில்லை என்பது சற்று குறையாக உள்ளது. இதனால் தண்ணீரில் இருந்து கொஞ்சம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். 

Advertisement


Xiaomi 14 Civi டிஸ்ப்ளே பிரகாசமாக உள்ளது. அதிகமாக படங்கள் பார்ப்பதற்கும் கேமிங்கிற்கும் ஏற்றது. இதில் உள்ள சிறப்பான அம்சம் என்னவென்றால், நேரடி சூரிய ஒளியின் கீழ் கூட, தெளிவாகத் தெரியும். Xiaomi 14 Civi உள்ள மிதக்கும்  Curved AMOLED டிஸ்ப்ளே பிரீமியம் உணர்வைத் தருகிறது. 


Xiaomi 14 Civi கேமரா


பிரைமரி கேமரா  - f/1.63 OIS உடன் 50MP


டெலிஃபோட்டோ - f/1.98 வசதியுடன் கூடிய 120-டிகிரி வைடு கவர் ஆகும் 12MP அல்ட்ரா-வைட் கேமரா

Advertisement


செல்ஃபிக்கு  - 32எம்பி அல்ட்ரா-வைட் செல்ஃபி கேமரா


இதில் உள்ள சிறந்த ஆட்டோஃபோகஸ் திறன் மூலம் பகலில் சீரான புகைப்படங்களை எடுக்க முடியும். வெவ்வேறு லைட்டிங் நிலைமைகளுக்கு பிரகாசத்தை மாற்றியமைக்கும் திறன் கொண்டுள்ளது. பெரும்பாலான லைட்டிங் நிலைகளில் தோல் டோன்களை நன்றாக காட்டுகிறது. அல்ட்ரா-வைட் ஷாட்களில் 14 சிவி சிறப்பாக செயல்படுகிறது. 


Xiaomi 14 Civi செயல்திறன்


Snapdragon 8s Gen 3 மொபைல் இயங்குதளத்தை கொண்டுள்ளது

Advertisement


8 ஜிபி RAM  + 256 ஜிபி மெமரி மற்றும்  12 ஜிபி RAM + 512 ஜிபி மெமரி என இரண்டு திறனில் கிடைக்கிறது


எந்த தடுமாற்றத்தையும் சந்திக்காமல், பல பயன்பாடுகளுக்கு இடையில் நீங்கள் சிரமமின்றி மாறலாம். எந்தவிதமான குறைபாடுகளும் இல்லாமல் பிழையின்றி செயல்படுகிறது. Xiaomiயின் புதிய IceLoop கூலிங் தொழில்நுட்பம் செல்போனை சூடாகாமல் தடுக்கிறது. 


Civi 4700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. வேகமாக சார்ஜ் செய்ய 67W பாஸ்ட் சார்ஜர் வசதியை கொண்டுள்ளது.  4610mAh பேட்டரியைக் கொண்ட விலையுயர்ந்த Xiaomi 14 விட இந்த போன் சிறப்பாக செயல்பட்டது. நீங்கள் முன்னதாக MIUI ஐப் பயன்படுத்தியிருந்தால் HyperOS நிச்சயமாக விரும்பத்தக்கதாக இருக்கும். 50 ஆயிரத்துக்கும் கீழ் கிடைக்கும் போன்களில் இது மிக தரமானது. 
 

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Leica camera features
  • Solid performance
  • Decent display
  • Powerful speakers
  • Value for money
  • Bad
  • No IP68 rating
  • Random notifications from GetApps
  • Battery output is not the best in the segment
 
KEY SPECS
Display 6.55-inch
Front Camera 32-megapixel + 32-megapixel
Rear Camera 50-megapixel + 50-megapixel + 12-megapixel
RAM 8GB, 12GB
Storage 256GB, 512GB
Battery Capacity 4700mAh
OS Android 14
Resolution 1236x2750 pixels
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Xiaomi 14 Civi, Xiaomi, Xiaomi 14, Xiaomi Mobile
 ...மேலும்
        
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. Samsung Fab Grab Fest 2025: Galaxy S25, Galaxy Z Fold7 முதல் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வரை - அதிரடி சலுகை
  2. Amazon-ல் Tablet வாங்க இதுதான் சரியான நேரம்! iPad, Samsung, OnePlus டேப்லெட்டுகளுக்கு அதிரடி சலுகைகள்
  3. Amazon Great Indian Festival 2025: Samsung, Xiaomi, LG ஸ்மார்ட் டிவி-களுக்கு அதிரடி விலைக் குறைப்பு
  4. Amazon vs Flipkart: Samsung Galaxy S24 Ultra மற்றும் iPhone 16 Pro-வுக்கு மிகப்பெரிய விலைக் குறைப்பு! எது வாங்கலாம்?
  5. Vivo X300 series போன் வெளியீட்டு தேதி உறுதியாகிடுச்சு! ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
  6. Samsung ஃபோன் வாங்கலாமா? Amazon Great Indian Festival Sale 2025-ல Galaxy S24 Ultra, Z Fold 6 உட்பட பல போன்களுக்கு செம Discounts
  7. OnePlus ரசிகர்கள் ரெடியா? Amazon Great Indian Festival Sale 2025-ல் பல மாடல்களுக்கு செம Discounts அறிவிச்சிருக்காங்க!
  8. Redmi மற்றும் Xiaomi ரசிகர்கள் ரெடியா? Amazon Great Indian Festival Sale 2025-ல் பல மாடல்களுக்கு செம Discounts அறிவிச்சிருக்காங்க
  9. வீட்டையே தியேட்டரா மாத்தணுமா? Amazon Sale-ல Lumio Vision-ன் Smart TVs மற்றும் Projectors-க்கு செம Discounts இருக்கு!
  10. Tablet வாங்க இதுதான் சரியான நேரம்! Amazon Great Indian Festival Sale 2025-ல் Apple முதல் Samsung வரைSpecial Discounts
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.