விவோவின் புதிய அத்தியாயம்... மடங்கும் போன்கள் பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள்!

விளம்பரம்
Written by Tasneem Akolawala மேம்படுத்தப்பட்டது: 15 பிப்ரவரி 2019 20:16 IST
ஹைலைட்ஸ்
  • விவோவின் ஐக்யூ சப்பிராண்ட் கடந்த வாரம் அறிமுகம் செய்யப்படவுள்ளது
  • மடங்கும் போன்கள் வெளியாகவுள்ளதாக தகவல்!
  • புகைப்படங்களை வைத்தே போனின் தகவல் கசிந்துள்ளது

போனின் முதற்கட்ட புகைப்படங்கள் வெளியாகி அதிரவைத்துள்ளது!

Photo Credit: Weibo

சில நாட்களுக்கு முன்னர் விவோ நிறுவனத்தின் துணை பிராண்டாக ஐக்யூ (IQOO) அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் இந்த புதிய பிராண்டின் கீழே எதிர்காலத்தில் பிரீமியம் தயாரிப்புகள் வெளியாகவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

மேலும் தற்போதைய தகவல்கள் படி 'மடங்கும் போன்' ஒன்று இந்த பிராண்டின் கீழ் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இப்படி வெளியாகும் இந்த ஐக்யூவின் மடங்கும் போன்களின் புகைப்படங்கள் வெய்போ தளத்தில் கசிந்துள்ளது.மேலும் புகைப்படத்திலிருந்தே அது மடங்கும் மாடல் போன்தான் என்று கணிக்க முடிகிறது.

அத்துடன் இந்த ஸ்மார்ட்போனை டேபாக மாற்றவும் முடியும் என பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. ஏற்கெனவே சாம்சங் நிறுவனம் சார்பாக மடங்க கூடிய ஸ்மார்ட்போன் ஒன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் விவோவின் இந்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

வெளியாகியுள்ள புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது முன்னால் செல்ஃபி கேமராயில்லை என்றும் இதனால் பாப் அப் கேமரா அல்லது திரைக்கு பின்னர் இந்த கேமரா வைத்திருக்கலாம் என பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

புகைப்படங்கள் தவிர இந்த புதிய மடக்கும் ஸ்மார்ட்போனின் விலையை பற்றிய தகவல்களும் வெளியாகியுள்ளது. அதன்படி ரூபாய் 53,000 விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் இப்படி தகவல்கள் வெளியானாலும் விவோ நிறுவனம் சார்பாக அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.

மடக்கும் (foldable)போன்களை பொருத்தவரை சாம்சங் நிறுவனம் தனது மடக்கும் போன்களை வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில்  அறிமுகம் செய்யப்படவுள்ளது. சாம்சங்கின் இந்த புதிய தயாரிப்பு ஓன்றுக்கும் மேற்பட்ட திரைகளுடன் புத்தக வடிவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Vivo, Vivo iQoo
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. விண்டோஸ் 11 கணினியில் உங்கள் ஆண்ட்ராய்டு ஃபோனை வெப்கேமாகப் பயன்படுத்துவது எப்படி: ஒரு படிப்படியான வழிகாட்டி
  2. வாட்ஸ்அப்பில் உங்கள் எண்ணை மறைப்பது எப்படி: சிறந்த தனியுரிமைக்காக யூசர்நேம் அமைப்பது எப்படி
  3. சியோமி 17T தொடர் இரு டிஸ்ப்ளே அளவுகள், புதிய வண்ணங்களில் வரவிருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்
  4. HMD வைப் 2 5G, ரெட்மி A7 4G, லாவா யுவா ஸ்டார் 3: இந்தியாவில் விலை மற்றும் அம்சங்கள் ஒப்பீடு
  5. IMEI தரவுத்தளத்தில் கசிந்த iQOO 16: உலகளாவிய மற்றும் இந்திய அறிமுகம் உறுதியானதாக அறிக்கை
  6. நெட் நியூட்ராலிட்டி கவலைகளால் ஏர்டெல் போஸ்ட்பெய்ட் சேவை ஒழுங்குமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை
  7. சியோமி 17T இந்திய அறிமுக தேதி அறிவிப்பு; உலகளாவிய அறிமுகத்திற்கு ஒரு வாரம் கழித்து வரவிருக்கிறது
  8. ரியல்மி 16T 5G விமர்சனம்: மலிவான விலையில் ப்ரோ மாடல் போன்ற தோற்றம்
  9. மோட்டோ ஜி37 பவர் vs ஒப்போ K14x vs சாம்சங் கேலக்ஸி M17 5G: இந்தியாவில் விலை, சிறப்பம்சங்கள் ஒப்பீடு
  10. மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ+ கேமரா விபரங்கள் உறுதி செய்யப்பட்டன; மூன்று வண்ண விருப்பங்களில் வரும்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.