விவோ, புதிய 5G போனான Vivo Z6-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்திய விவோ போன் 48 மெகாபிக்சல் பிரதான ஷூட்டருடன் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது., அதனுடன் பிரத்யேக வைட்-ஆங்கிள் மற்றும் மேக்ரோ கேமராக்கள் உள்ளன. சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர், Vivo Z6 5G திரவ குளிரூட்டும் தொழில்நுட்பத்துடன் வருகிறது என்றார்.
Vivo Z6 5G போனின் அடிப்படை 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டிற்கு CNY 2,198 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.22,000)-யாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடலுக்கான விலை CNY 2598 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.26,000)-யாக உள்ளது. இது Interstellar Silver மற்றும் Ice Age கலர் ஆப்ஷன்களில் வருகிறது, இது பிப்ரவரி 29 முதல் முன்கூட்டியே ஆர்டர் செய்யப்படும். இருப்பினும், இந்தியா உள்ளிட்ட பிற சந்தைகளில் Vivo Z6 5G கிடைப்பது குறித்து எந்த விவரங்களையும் நிறுவனம் வெளியிடவில்லை.
டூயல்-சிம் (நானோ) Vivo Z6 5G ஆண்ட்ராய்டு 10-ஐ அடிப்படையாகக் கொண்ட FuntouchOS-ல் இயக்குகிறது. மேலும் சிறந்த மேலாண்மை மற்றும் செயல்திறன் வெளியீட்டிற்காக மல்டி-டர்போ 3.0 மற்றும் கேம் ஸ்பேஸ் 3.0 போன்ற மென்பொருளில் பல மேம்பாடுகளுடன் வருகிறது. இது 20: 9 விகிதம் மற்றும் 90.74 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன் 6.57 இன்ச் ஃபுல்-எச்டி + (1,080x2,400 பிக்சல்) டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இது, 8 ஜிபி வரை ரேம் உடன் இணைக்கப்பட்டு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 765G SoC SoC-யால் இயக்கப்படுகிறது.
Vivo Z6, குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இது, f/1.79 aperture மற்றும் 6-element லென்ஸுடன் 48 மெகாபிக்சல் பிரதான கேமராவைக் கொண்டுள்ளது. இது f/2.2 aperture மற்றும் 112-degree field of view உடன் 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் லென்ஸுடனும், மேக்ரோ புகைப்படம் எடுத்தல் மற்றும் depth sensing-கிற்காக f/2.4 aperture கொண்ட 2 மெகாபிக்சல் கேமராக்களுடனும் உள்ளது. முன்புறத்தில், f/2.48 aperture உடன் 16 மெகாபிக்சல் செல்பி கேமரா hole-punch-ல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த போன் 128 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜை வழங்குகிறது. Vivo Z6 5G-யில் 44W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங் தொழில்நுட்ப ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. இது 35 நிமிடங்களில் 0 முதல் 70 சதவீதம் வரை பேட்டரியை சார்ஜ் செய்வதாகக் கூறப்படுகிறது. இந்த போன் 163.99 x 75.71 x 9.16mm அளவு மற்றும் 201 கிராம் எடை கொண்டதாகும்.
இணைப்பு விருப்பங்களில் டூயல்-மோட் 5G (NSA + SA) support, 4G LTE, Bluetooth 5.1, Beidu, GLONASS, GPS, Galileo, 3.5mm headphone jack மற்றும் சார்ஜிங் & file transfer-க்காக USB Type-C port ஆகியவை அடங்கும். Vivo Z6 5G-யின் ஆன்போர்டு சென்சார்களில் accelerometer, proximity சென்சார், ambient light சென்சார், compass மற்றும் gyroscope ஆகியவை அடங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்