விவோ Z3x ஸ்மார்ட் போன், சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ Z1 போனின் அடுத்த வெர்ஷனாக இந்த போன் வந்துள்ளது. ஸ்னாப்டிராகன் 660 எஸ்.ஓ.சி, 16 மெகா பிக்சல் செல்ஃபி கேமரா போன்ற வசதிகளுடன் இந்த போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 6.26 இன்ச் முழு எச்.டி+ திரை, நாட்ச் டிசைன் டிஸ்ப்ளே, கேம் டர்போ, சிஸ்டம் டர்போ போன்ற பிற வசதிகளையும் இந்த போன் பெற்றுள்ளது.
விவோ Z3x விலை:
இந்திய மதிப்புப்படி இந்த போன் 12,400 ரூபாய்க்கு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ஒரே வகைதான் தற்போதைக்கு வெளியிடப்பட்டுள்ளது. சிவப்பு, ஊதா, கருப்பு வண்ணங்களில் இந்த போனை வாங்க முடியும். மே 1 முதல் இந்த போன் சீன சந்தைகளில் ப்ரீ-ஆர்டருக்கு வரவுள்ளது. மே 8 முதல் போன் விற்பனை செய்யப்படும்.
கடந்த ஆண்டு மே மாதம் விவோ Z1 போன் சீனாவில், சுமார் 18,600 ரூபாய்க்கு அறிமுகம் செய்யப்பட்டது.
விவோ Z3x சிறப்பம்சங்கள்:
நானா டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு பைய் இயங்கு மென்பொருள், ஃபன் டச் ஓ.எஸ் 9, 6.26 இன்ச் முழு எச்.டி+ டிஸ்ப்ளே, 19:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, ஆக்டோ கோர் குவால்கம் ஸ்னாப்டிராகன் 660 எஸ்.ஓ.சி, 4ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு வசதிகளை இந்த போன் பெற்றுள்ளது.
போனின் பின்புறத்தில் 13 மெகா பிக்சல் முதன்மை கேமரா, 2 மெகா பிக்சல் இரண்டாவது கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. செல்ஃபிகளுக்காக 16 மெகா பிக்சல் கேமரா வசதி இருக்கிறது.
4G LTE, Wi-Fi, ப்ளூடூத், GPS/ A-GPS போன்ற இணைப்பு வசதிகளை Z3x பெற்றுள்ளது. 3,260 எம்.ஏ.எச் பேட்டரி மூலம் Z3x போன் பவரூட்டப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்