Vivo நிறுவனம் தனது U வகை போன்களை இந்திய சந்தையில் கொண்டு வந்துள்ளது. அமேசான் ஆன்லைன் தளம் மற்றும் விவோ இணையதளங்களில் மட்டும் இந்த போன் கிடைக்கும்படி மார்க்கெட் செய்துள்ளது விவோ. இளைஞர்களை மனதில் வைத்து கொண்டு வரப்பட்டுள்ள இந்த Vivo U10 ஸ்மார்ட் போனில், எச்டி+ ஹாலோ முழு வியூ டிஸ்ப்ளே, வாட்டர் டிராப் நாட்ச், ஆக்டா கோர் ப்ராசஸர் உள்ளிட்ட அட்டகாச வசதிகளைப் பெற்றுள்ளது. இதைத் தவிர கேம் மோடிற்கு தனியாக ஒரு அம்சமும் சேர்க்கப்பட்டுள்ளது.
விவோ U10 விலை, ஆஃபர்கள்:
விவோ U10-ன் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போனின் விலை 8,990 ரூபாயாகும். மேலும் 3 ஜிபி ரேம் + 64 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட இன்னொரு வகைக்கு 9,990 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 4ஜிபி ரேம் + 64ஜிபி சேமிப்பு வசதி கொண்ட உச்சபடச மாடலின் விலை 10,990 ரூபாயாகும். எலக்ட்ரிக் நீலம் மற்றும் தண்டர் கறுப்பு நிறங்களில் இந்த போன் சந்தையில் கிடைக்கும். அமேசான் மற்றும் விவோ இந்திய தளங்களில் வரும் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் இந்த போன் விற்பனைக்கு வரும்.
எஸ்.பி.ஐ கார்டு மூலம் விவோ U10-ஐ வாங்கினால், உடனடியாக 10 சதவிகித கேஷ்-பேக் கொடுக்கப்படும். 6 மாத கட்டணமில்லா இஎம்ஐ ஆப்ஷனையும் தருகிறது விவோ. ஜியோ சப்ஸ்கிரைபர்களுக்கு 6,000 ரூபாய் மதிப்பிலான சலுகைகள் இருக்கின்றன. இந்த போனை விவோ இந்தியா தளம் மூலம் வாங்கினால், அடுத்த முறை பர்சேஸின் போது 750 ரூபாய் தள்ளுபடி தரப்படும்.
விவோ U10 சிறப்பம்சங்கள் மற்றும் அமைப்புகள்:
டூயல் நானோ சிம் கார்டு ஸ்லாட்டுகளைக் கொண்டுள்ள விவோ U10, ஆண்ட்ராய்டு 9 பைய் மென்பொருள் மூலம் இயங்குகிறது. 6.35 இன்ச் எச்டி+ திரை, ஹாலோ முழு டிஸ்ப்ளே, 19.5:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 89 சதவிகிதம் ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ, குவால்கம் ஸ்னாப்டிராகன் 665 ஏஐஈ எஸ்ஓசி, 4ஜிபி ரேம் உள்ளிட்ட அம்சங்களைப் பெற்றுள்ளது விவோ U10.
புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்காக 13 மெகா பிக்சல் கொண்ட முதன்மை கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட இரண்டாவது கேமரா (120 வைடு ஆங்கில்), 2 மெகா பிக்சல் கொண்ட பொர்ட்ரெய்ட் சென்சார்களை பின்புறத்தில் கொண்டுள்ளது. ரியர் கேமராவுடன் எல்ஈடி ஃப்ளாஷ் மாட்யூலும் உள்ளது. செல்ஃபிகளுக்காக 8 மெகா பிக்சல் கொண்ட முன்புற கேமராவையும் பெற்றுள்ளது விவோ U10.
4G LTE, வை-ஃபை, ப்ளூடூத் v5.0, GPS/ A-GPS, எப்எம் radio, மற்றும் மைக்ரோ-USB போர்ட் இணைப்பு வசதிகளைக் கொண்டிருக்கிறது U10.
5,000 எம்.ஏ.எச் பேட்டரி மூலம் பவரூட்டப்பட்டுள்ள விவோ U10, 18W அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது. ஒரு சார்ஜ் மூலம் 38.6 மணி நேரம் இந்த போனில் பேச முடியும் என்று நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்