வரவிருக்கும் Xperia ஸ்மார்ட்போனில் Hole-Punch டிஸ்பிளேவை பயன்படுத்தும் சோனி!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 27 டிசம்பர் 2019 13:03 IST
ஹைலைட்ஸ்
  • சோனி, புதிய flagship Xperia போனை MWC 2020-ல் அறிமுகப்படுத்தலாம்
  • வரவிருக்கும் ஸ்மார்ட்போனில் hole-punch கேமரா இடம்பெறும்
  • இந்த காப்புரிமை, சாதனத்தின் user interface-ஐக் காட்டுகிறது

சோனி ஸ்மார்ட்போன் இடதுபுறத்தில் நேரத்தையும், வலது புறத்தில் பேட்டரி நிலையையும் காண்பிக்கும்

Photo Credit: LETSGODIGITAL

ஜப்பானிய எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பாளர், 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸின் (Mobile World Congress) போது சோனியின் புதிய flagship Xperia போனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வரவிருக்கும் சாதனத்தில் hole-punch கேமராவைக் கொண்டிருக்கும் என்று காப்புரிமை தெரிவிக்கிறது. 

காப்புரிமையில் சேர்க்கப்பட்டுள்ள ஸ்கிரீன் ஷாட்கள் புதிய சோனி ஸ்மார்ட்போன் இடதுபுறத்தில் நேரத்தையும், வலது புறத்தில் பேட்டரி நிலையையும், மேல் மூலைகளை பயன்படுத்தி காண்பிக்கும் என்று GSM Arena தெரிவித்துள்ளது. எனவே, hole-punch கேமரா, நடுவில் வைக்கப்படும் என்பதைக் குறிக்கலாம். ஸ்மார்ட்போன் multi-window செயல்பாட்டை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரவிருக்கும் Sony Xperia ஸ்மார்ட்போன் MWC 2020-ல் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Photo Credit: LETSGODIGITAL

சோனி தனது சமீபத்திய flagship போன்களில் 21: 9 aspect ratio-வை ஏற்றுக்கொண்டது. மேலும், செல்ஃபி கேமராவை திரையில் நகர்த்துவது, நிறுவனம் திரையை மேலும் நீட்டிக்க அனுமதிக்கும். இந்த சாதனம் 12GB RAM உடன் இணைக்கப்பட்டு, குவால்காமின் ஸ்னாப்டிராகன் 865 SoC-யை கொண்டிருக்கும் என்று வதந்தி பரவியுள்ளது.

கூடுதலாக, இந்த சாதனம் 5G இணைப்பு மற்றும் பின்புறத்தில் ஆறு கேமராக்கள் மற்றும் ஒரு QHD திரையுடன் வரும் என்று நம்பப்படுகிறது.

கடந்த ஆண்டு சோனி தனது Xperia 10 மற்றும் 10 Plus உடன் Xperia 1-ஐ MWC-ன் போது வெளியிட்டது.

தனித்தனியாக, Sony Xperia K8220 பட்டியல் சமீபத்தில் கீக்பெஞ்சில் காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது முக்கிய விவரக்குறிப்புகளைக் குறிக்கிறது. K8220 என்ற குறியீட்டுடன் பெயரிடப்பட்ட சோனி ஸ்மார்ட்போன் single-core மற்றும் multi-coreர் சோதனைகளில் 465 மற்றும் 1,757 மதிப்பெண்களைப் பதிவு செய்தது. பட்டியலின்படி, Sony Xperia K8220, 8GB RAM  உடன் இணைக்கப்பட்டு Android 10-யில் இயங்கும்.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Sony, Xperia, MWC 2020, MWC, WIPO
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. "இது வேற லெவல்!" - Apple-ன் 'Awe Dropping' நிகழ்வு! iPhone 17, Apple Watch Series 11, AirPods Pro 3-ல் என்னென்ன எதிர்பார்க்கலாம்?
  2. 7,000mAh பேட்டரி கொண்ட உலகின் முதல் போன்! Oppo F31 சீரிஸ் லீக் ஆகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
  3. அவசர வேலைகளில் 'உதவாத' ஏர்டெல்! ஒரே வாரத்தில் இரண்டாவது முறை சேவை முடக்கம்
  4. மடக்கலாம், மிரட்டலாம்! Honor-ன் புது போன் சந்தையில் அறிமுகம்! விலை, சிறப்பம்சங்கள் இதோ!
  5. பெங்களூருவில் Apple-ன் புதிய கடை! செப்டம்பர் 2-ல் திறப்பு! என்ன ஸ்பெஷல்?
  6. இந்தியாவில் Pixel 10, Pixel 10 Pro, Pixel 10 Pro XL லான்ச்! ₹79,999-க்கு Google-ன் புது அஸ்திரம்
  7. கூகிளின் முதல் IP68 ஃபோல்டபிள் போன் லான்ச்! ₹1.72 லட்சத்தில் Pixel 10 Pro Fold
  8. Redmi 15 5G: ₹15,000-க்குள்ளே 7,000mAh பேட்டரி, 144Hz டிஸ்ப்ளே உடன் மாஸ் என்ட்ரி!
  9. Airtel-ன் அதிர்ச்சி அறிவிப்பு! ₹249 ரீசார்ஜ் திட்டம் நீக்கம்! இனி ₹50 அதிகம் செலவு செய்யணும்
  10. Honor X7c 5G லான்ச்! ₹14,999-க்கு 5G போன்! Snapdragon 4 Gen 2 SoC, 5,200mAh பேட்டரி
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.