Photo Credit: Qualcomm
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது OnePlus 13 செல்போன் பற்றி தான்.
OnePlus 13 அக்டோபர் இறுதியில் சீனாவில் அறிமுகமாகும் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய Snapdragon 8 Elite chip அல்லது Snapdragon 8 Gen 4 SoC மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வகையான சிப் அடுத்து வரும் Xiaomi மற்றும் Oppo செல்போன்களுக்கு சக்தி அளிக்கும் என நம்பப்படுகிறது. புதிய Snapdragon 8 Elite chip வருகையை உறுதி செய்யும் விதமாக ஸ்னாப்டிராகன் உச்சிமாநாட்டிற்கான அதிகாரப்பூர்வ மைக்ரோசைட்டில் குவால்காம் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டது. வரவிருக்கும் சிப்செட்டில் ஓரியன் கோர்கள் இருக்கும் என்று வீடியோ உறுதியளிக்கிறது. சமீபத்திய Copilot+ PCகளை இயக்கும் Snapdragon X சிப்களில் இதே கட்டமைப்பு பயன்படுத்தப்படுகிறது. Oryon கோர்கள் செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வீடியோவில் ஒரு வட்ட கேமரா யூனிட் கொண்ட ஸ்மார்ட்போன் புதிய சிப்செட்டை எடுத்துச் செல்வதைக் காணலாம். இது வரவிருக்கும் OnePlus 13 போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. OnePlus சிக்னேச்சர் கேமரா யூனிட் செல்போனின் மேல்-இடது மூலையில் வைக்கப்பட்டுள்ளது. இது OnePlus 12 மற்றும் OnePlus 11 வடிவமைப்பை ஒத்திருக்கிறது.
Qualcomm Snapdragon 8 Elite SoC உடன் அறிமுகமாகும் உலகின் முதல் ஸ்மார்ட்போன் OnePlus 13 என OnePlus சீனாவின் தலைவர் லூயிஸ் லீ தெரிவித்துள்ளார். ந்த புதிய சிப்செட் அக்டோபர் 22 ஆம் தேதி ஹவாய், மவுய் நகரில் நடைபெறும் ஸ்னாப்டிராகன் உச்சி மாநாட்டின் போது அறிமுகப்படுத்தப்படும். சியோமி 15 ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக அறிமுகமாகும் என முன்னர் ஊகிக்கப்பட்டது. iQOO, Honor மற்றும் Oppo ஆகியவையும் சீனாவில் Snapdragon 8 Elite சிப்செட் மூலம் இனி இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் வெளியான தகவல் படி, OnePlus 13 ஆனது 2K தெளிவுத்திறன் மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.82-இன்ச் LTPO BOE X2 மைக்ரோ குவாட் வளைந்த OLED டிஸ்ப்ளேவுடன் வரும். இது 24ஜிபி வரை ரேம் மற்றும் 1டிபி வரை ஆன்போர்டு ஸ்டோரேஜ் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. 50-மெகாபிக்சல் LYT-808 பிரதான கேமராவைக் கொண்ட மூன்று பின்புற கேமரா யூனிட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமரா அமைப்பில் 50 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 50 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ ஷூட்டர் ஆகியவை அடங்கும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்