இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ் 10 ஸ்மார்ட்போனின் விலை விபரம் கசிந்துள்ளது. இந்த போனுக்கான முன்பதிவு ஏற்கெனவே ஃபிளிப்கார்ட், அமேசான், பேடிஎம் மற்றும் டாட்டா க்ளிக் (tata cliq) போன்ற தளங்களில் துவங்கியுள்ள நிலையில், சாம்சங் எஸ் 10+ மற்றும் கேலக்ஸி எஸ் 10 இ போன்களும் இந்தியாவில் வரும் மார்ச் 5 முதல் வெளியாகிறது.
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ் 10 (128 ஜிபி) ரூபாய் 66,900 க்கு துவங்குகிற நிலையில் (512 ஜிபி) மாடல் ரூபாய் 84,900 ரூபாய்கு விற்பனை செய்யப்படுகிறது. 512 ஜிபி மாடல் போன் ப்ரிசம் வையிட் நிறத்தில் மட்டுமே வெளியாகவுள்ளது. ஆனால் 128 ஜிபி கொண்ட மாடல் போன் ப்ரிசம் ப்ளாக், ப்ரிசம் ப்ளூ மற்றும் ப்ரிசம் வையிட் ஆகிய நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.சாம்சங் 10 இ வகை ஸ்மார்ட்போன் ரூபாய் 55,900 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
128 ஜிபி மாடல் மட்டுமே இந்தியாவில் வெளியாகியுள்ள நிலையில், அது ப்ரிசம் வையிட் மற்றும் ப்ரிசம் ப்ளாக் ஆகிய நிறங்களில் வெளியாகிறது. மேலும் சாம்சங் எஸ் 10 போன்களை முன்பதிவு செய்யும் போது சிறப்பு தள்ளுபடியாக கேலக்ஸி இயர்பட் (ரூ.2,999) அல்லது கேலக்ஸி வாட்ச் (ரூ.9,999) ஏதோ ஒன்றை தேர்வு செய்து தள்ளுபடி விலையில் வாங்கிச் செல்லாம்.
மூன்று போன்களுமே ஆண்ட்ராய்டு 9.0 பைய் (Pie) மென்பொருளில் இயங்குகின்ற நிலையில், சாம்சங் கேலக்ஸி எஸ்10 போனுக்கு 6.1 இஞ்ச் வளைந்த அமைப்பு கொண்ட அமோலெட் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே உடன் வெளியாகிறது. கேலக்ஸி 10 இ ஸ்மார்ட்போன் 5.8 இஞ்ச் உயரமும் அமோலெட் திரையையும் கொண்டுள்ளது.
மேலும் ஸ்னாப்டிராகன் 855 SoC மற்றும் சாம்சங் எஃஸ்நாஸ் 9820 SoC ப்ராசஸ்சர்கள் இடம் பெற்றுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ் 10 போன் 8ஜிபி ரேமுடன் வெளியாபோகும் நிலையில், கேல்க்ஸி எஸ் 10+ 12 ஜிபி ரேம் உடன் வெளியாகியுள்ளது. மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ் 10 இ 6ஜிபி மற்றும் 8ஜிபி ரேம்களுடன் வரும்.
சாம்சங் எஸ் 10+ இரண்டு செல்ஃபி கேமராவுடனும் வெளியாகிறது. புகைப்படங்களைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்10 மற்றும் எஸ்10+ ஆகிய இரண்டு போன்களுமே மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளன.
கேலக்ஸி எஸ் 10 இ போன் இரண்டு பின்புற கேமாரக்களை கொண்டுள்ளன. பேட்டரியைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எஸ்.10 3,400mAh பவரைக கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்.10+ ஸ்மார்ட்போனுக்கு 4,100mAh பேட்டரி பவரும், கேலக்ஸி எஸ்10 இ போனில் 3,100mAh பேட்டரி பவரும் உள்ளன.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்