வாடிக்கையாளர் அனுமதியின்றி காலரி பகிரப்பட்டதற்கு சாம்சங் நிறுவனம் பதில்

வாடிக்கையாளர் அனுமதியின்றி காலரி பகிரப்பட்டதற்கு சாம்சங் நிறுவனம் பதில்
ஹைலைட்ஸ்
  • வாடிக்கையாளர் அனுமதி இல்லாமல் பகிரப்பட்ட காலரி
  • சாம்சங் காலெக்சி போன் வாடிக்கையாளகர்களுக்கு பாதிப்பு
  • மிகப்பெரிய ப்ரைவசி பாதிப்பாக பார்க்கப்படுகிறது
விளம்பரம்

சாம்சங் மெசேஜ் பயன்பாடு வழியாக காலரியில் உள்ள புகைப்படங்கள், அனுமதி இல்லாமல் பிறருக்கு பகிரப்படுவதாக சாம்சங் போன் வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டி இருந்தனர்

 

காலரியில் உள்ள பைல்கள் பகிரப்பட்டதற்கான சுவடே இல்லாமல், இந்த பிரச்சனை தொடர்ந்து நடைப்பெற்று வருவதாக வாடிக்கையாளர்கள் கூறினர். சாம்சங் மெசேஜ் ஆப் சாம்சங் போன்களில் உள்ளிருப்பவை

 

இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட எண்ணிக்கையை கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும், இது மிகப்பெரிய ப்ரைவசி பிரச்சனையாக பார்க்கப்படுகிறது

 

“சாம்சங் போன்களில் இந்த பிரச்சனை இருப்பதை குறித்து நாங்கள் அறிவோம். நிறுவனத்தின் தொழில்நுட்ப குழு, பிரச்சனை குறித்து ஆராய்ந்து வருகிறது. பாதிப்படைந்த வாடிக்கையாளர்கள் 1-800-SAMSUNGயை தொடர்பு கொள்ளலாம்” என்று சாம்சங் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பிற்கான காரணத்தையோ, சரி செய்யும் முறைகள் பற்றியோ சாம்சங் நிறுவனம் எந்த தகவலும் வெளியிடவில்லை

 

ரெட்டிட் இணையதளத்தின் சாம்சங்  மொபைல் போன்கள் பிரச்சனையை குறித்து வாடிக்கையாளர்கள் பதிவிட்டிருந்தனர். குறிப்பாக சாம்சங் காலெக்சி 9, காலெக்சி நோட் 8 போன்களில் இந்த பிரச்சனை அதிகமாக காணப்பட்டுள்ளது. காலரியில் இருந்து பகிரப்பட்டதற்கான ரெக்கார்டுகள் போனின் காரியர் லாக்கில் உள்ளது, ஆனால் சாம்சங் மெசேஜ் ஆப்பில் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது


 

© The Washington Post 2018

Comments

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung, Samsung Messages
பேஸ்புக்கில் பகிரலாம் Gadgets360 Twitter Shareட்வீட் பகிர் Snapchat ரெட்டிட்டில் கருத்து
#சமீபத்திய செய்திகள்
© Copyright Red Pixels Ventures Limited 2024. All rights reserved.
Trending Products »
Latest Tech News »