Photo Credit: Sammobile
Samsung Galaxy View 2: சாம்சாங் கேலக்ஸி வியூ 2 டேப் விரைவில் வெளியாக உள்ளது.
சாம்சங் கேலக்ஸி வியூ டேப்லெட் வெற்றியை தொடர்ந்து, அதில் புதிய வேரியண்ட் வெளிவருவதாக இணையத்தில் தகவல்கள் வந்தது. முந்தைய மாடலை காட்டிலும் இந்த புதிய கேலக்ஸி வியூ 2-வின் வடிவமைப்பில் மட்டும் சில சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த கேலக்ஸி வியூ 2 டேப் ஆனது கேரியர் ஏடி&டியால் வெளியிடப்படுகிறது. அதில் வை-பை வேரியண்ட் வருவதாகவும் தெரிய வந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி வியூ டேப்லெட் கடந்த 2015 அக்டோபரில் வெளியானது. அதன் வெற்றியை தொடர்ந்து, அடுத்த எந்த வேரியண்ட்டும் அதில் வெளியாகவில்லை.
சாம்சங் கேலக்ஸி வியூ 2 டேப்லெட் குறித்து வெளியான புகைப்படங்களை சாம்மொபைல் வெளியிட்டுள்ளது. அதில், டிஸ்பிளேயின் அனைத்து பகுதிகளிலும் பெசல்ஸ் கொண்டுள்ளது. வடிவமைப்பில் சிறு மாற்றம் கொண்டுள்ளது. அதன்படி, கேலக்ஸி வியூ டேப்லெட் பின்பகுதியில் அதனை பிடிப்பதற்கு இலகுவாக ஓவல் சைஸில் வளையம் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வெளிவந்துள்ள தகவலின்படி, முந்தைய மாடலில் இருந்து சாம்சங் கேலக்ஸி வியூ 2 டேப்லெட் சிறு மாற்றங்களை மற்றுமே கொண்டுள்ளது. இந்த டேப்லெட்டானது, 17.5 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது. கேலக்ஸி வியூ டேலப்லெட் ஆனது 18.4 இன்ச் டிஸ்பிளே கொண்டிருந்தது.
மேலும், இதில் எக்ஸினோஸ் 7885 SoC, 3ஜிபி ரேம், கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், சாம்சாங் சார்பில் இதன் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்