மிரட்டல் அம்சங்களுடன் வருது சாம்சங் கேலக்ஸி S24 FE

விளம்பரம்
Written by மேம்படுத்தப்பட்டது: 1 ஜூலை 2024 13:08 IST

Photo Credit: Samsung

விற்பனையில் சக்கைபோடு போட்ட சாம்சங் கேலக்ஸி மாடலின் S24 FE எடிசன் விரைவில் வெளியாக இருக்கிறது. பல எதிர்பாராத அம்சங்கள் Samsung Galaxy S24 FE மாடலில் இருக்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 6.65 இன்ச் டிஸ்பிளேவுடன்  வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேமிங் மற்றும் வீடியோ எடிட்டிங் செய்ய செய்ய செம்ம மாஸ்சாக இருக்கும்.

இந்தியாவில் Samsung Galaxy S24 FE மாடல் ரூபாய் 59,999க்கு அறிமுகம் ஆகும் என தெரிகிறது. 8 ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6.65 இன்ச் அளவிலான அமோஎல்இடி டிஸ்பிளே இருக்கலாம். பவர்புலான Snapdragon 8 Gen 3 சிப்செட் இருப்பதால் கேமிங், வீடியோ எடிட்டிங் என அனைத்து பயன்பாட்டுக்கும் உதவிகரமாக இருக்கும்.

Advertisement

இதுதவிர, Samsung Galaxy S24 FE  வேரியண்ட் Exynos 2400 SoC சிப் மூலம் இயங்கும் என தெரிகிறது. இதனால் வேகம் பக்காவாக இருக்கும். சாம்சங் கேலக்ஸி S23 FE மாடலில் உள்ளதை போலவே 4500 எம்ஏஎச் பேட்டரி இருக்கலாம் என தெரிகிறது. இது ஒருநாள் முழுக்க தாக்குபிடிக்க உதவும். கேமராக்கள் வடிவமைப்பு மற்றும் கலர் ஆப்ஷன்கள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

கூடுதலாக டிரிபிள் ரியர் கேமரா யூனிட், அதில் OIS எனப்படும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் வசதி சேர்க்கப்பட்டுள்ளது.  50 மெகாபிக்சல் மெயின் கேமரா, 12 எம்பி அல்ட்ராவைடு ஷூட்டர், 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா, முன்பக்கத்தில் 10 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார் உள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Mobile phone, Samsung Mobile, Samsung Galaxy S24 FE, Samsung
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. டென்சர் ஜி6 சிப் வதந்திபோல் 2nm அல்ல, TSMC-ன் 3nm முறையில் உருவானது என கூகுள் உறுதிப்படுத்தியதாக தகவல்
  2. iQOO Neo 11 Ultra புதிய'Monster'சூப்பர் கோர் இன்ஜின், கஸ்டம் MediaTek சிப்செட்டுடன் வெளியாகும் என உறுதியானது
  3. மோட்டோ ஜி மேக்ஸ் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 6s Gen 4 சிப்,7,000mAh பேட்டரியுடன் அறிமுகம்:விலை, சிறப்பம்சங்கள்
  4. ஸ்மார்ட் கண்ணாடி பதிவு தனியுரிமை சிக்கல்களை ஆப்பிள் எவ்வாறு கையாளும் என அதன் காப்புரிமை காட்டுகிறது
  5. பின்புறத்தில் இரண்டாம் நிலைத் திரையுடன் போவா 8 புரோ 5ஜி இந்தியாவில் அறிமுகமாகும் தேதி வெளியானது!
  6. 144Hz டிஸ்ப்ளே, 7,000mAh பேட்டரியுடன் ரியல்மி 16x 5G இந்தியாவில் விற்பனைக்கு வந்தது: விலை, சலுகைகள்
  7. இரட்டை-சிப் & ஹெல்த் கார்டியன் அம்சங்களுடன் கூகிள் பிக்சல் வாட்ச் 5 இந்தியாவில் அறிமுகம்: விலை, விவரங்கள்
  8. இந்தியாவில் ஆப்பிள் ஏர்டேக்கிற்கு போட்டியாக கூகுள் பிக்சல் டேக் அறிமுகம்: விலை மற்றும் அம்சங்கள்
  9. இந்தியாவில் கூகுள் பிக்சல் 11 விலை: புதிய பிக்சல் 11 தொடருக்கான உங்கள் முழுமையான வழிகாட்டி
  10. கூகுள் பிக்சல் 11 மற்றும் ஐபோன் 17 ஒப்பீடு: இந்தியாவில் விலை மற்றும் முழுமையான விவரக்குறிப்புகள்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.