Samsung Galaxy M51 ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி, விலை, சிறப்பம்சங்கள் லீக்!

விளம்பரம்
Written by Jagmeet Singh மேம்படுத்தப்பட்டது: 25 ஆகஸ்ட் 2020 10:05 IST
ஹைலைட்ஸ்
  • இதில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 730 SoC பிராசசர் இருக்கலாம்
  • இந்தியாவில் தயாரிக்கப்பட்டது
  • ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்படுவதாக இருந்தது

சாம்சங் கேலக்ஸி M51 குறித்த விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன

Photo Credit: OnLeaks/ Pigtou

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி M51 ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகம் செய்யப்படும், அதிலுள்ள சிறப்பம்சங்கள் குறித்த விவரங்கள் கசிந்துள்ளன. 

சாம்சங் தரப்பில் புதிதாக கேலக்ஸி M51 என்ற ஸ்மார்ட்போன் உருவாகி வருகிறது. இந்த ஸ்மார்ட்போனைக் குறித்து சில விவரங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அதன்படி, செம்படம்பர் மாதத்தில் கேலக்ஸி M51 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்றும், இதில் 7,000mAh சக்தி கொண்ட மிகப்பெரிய பேட்டரி இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், பின்பக்கத்தில் நான்கு கேமராக்கள் (குவாட் கேமரா) இருக்கலாம் என்றும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்துள்ளன.

சாம்சங் கேலக்ஸி M51 எதிர்பார்க்கப்படும் விலை: 

இதுதொடர்பாக இந்தோ ஏசியன் நியூஸ் சர்வீஸ் (IANS) தரப்பில் செய்திகள் வந்துள்ளன. அதன்படி, சாம்சங் கேலக்ஸி M51 உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும். செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்றும், இதன் விலை 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

முன்னதாக கேலக்ஸி M51 ஸ்மார்ட்போன் கடந்த ஜூலை மாதம் அறிமுகம் செய்யப்படுவதாக கூறப்பட்டது. ஆனால், உற்பத்தியில் ஏற்பட்ட சில சிக்கல்கள் காரணமாக, செப்டம்பருக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதன் மாடல் நம்பர் SM-M515F என்றும், M சீரிஸ் வரிசையில் இதுவே புத்தம் புதிய ஸ்மார்ட்போன் என்றும் கூறப்படுகிறது.
 

சாம்சங் கேலக்ஸி M51: எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்
 

சாம்சங் கேலக்ஸி M51 ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் அளவிலான பெரிய அமோலேட் டிஸ்பிளே, ஆக்டா கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன் 730 SoC பிராசசர், 8ஜிபி ரேம், குவாட் கேமரா அமைப்பு இருக்கலாம். கேமராவைப் பொறுத்தவரையில் 64 மெகா பிக்சலுடன் கூடிய பிரைமரி கேமரா, 12 மெகா பிக்சலுடன் கூடிய அலட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் கேமரா இருக்கலாம்.

மேலும்,7000mAh சக்தி கொண்ட பேட்டரி, அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, வைஃபை, ப்ளூடூத், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உள்ளிட்ட அம்சங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Why are smartphone prices rising in India? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Excellent battery life
  • Bundled fast charger
  • Crisp Super AMOLED display
  • Bad
  • Preinstalled bloatware
  • Average video stabilisation
 
KEY SPECS
Display 6.70-inch
Processor Qualcomm Snapdragon 730G
Front Camera 32-megapixel
Rear Camera 64-megapixel + 12-megapixel + 5-megapixel + 5-megapixel
RAM 6GB
Storage 128GB
Battery Capacity 7000mAh
OS Android 10
NEWS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

மேலும் படிக்க: Samsung Galaxy M51 specifications, Samsung Galaxy M51, Samsung
Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. BSNL சிம் கார்டு வீட்டுக்கே டெலிவரி! ₹0 செலவில் செல்ஃப்-KYC வசதியுடன் - எப்படி பெறுவது? முழு விபரம்!
  2. Honor X9c: 108MP கேமரா, 1.5K Curved AMOLED டிஸ்ப்ளேவுடன் இந்தியாவில் லான்ச் உறுதி! அமேசானில் கிடைக்கும்!
  3. Poco F7 5G: இந்தியாவுக்கு ஸ்பெஷல் 7550mAh பேட்டரி! ஜூலை 1 முதல் விற்பனை!
  4. Vivo T4 Lite 5G: Dimensity 6300 SoC, IP64 பாதுகாப்புடன் இந்தியாவில மாஸ் காட்டும்!
  5. Vivo X200 FE: Zeiss கேமரா, IP68+IP69 பாதுகாப்புடன் ஒரு ஃபிளாக்‌ஷிப் போன்!
  6. அறிமுகமாகிறது Galaxy Z Fold 7, Z Flip 7: புது AI, Watch 8 சீரிஸுடன் Samsung-ன் பிரம்மாண்ட Unpacked!
  7. அறிமுகமாகிறது Nothing Phone 3: Snapdragon 8s Gen 4 SoC, 5150mAh பேட்டரியுடன் மாஸ் காட்டும்!
  8. Oppo Reno 14 5G சீரிஸ்: ஜூலை 1-ல் உலக அறிமுகம்! Amazon, Flipkart-ல் இந்தியாவில் கிடைக்குது - முழு விபரம்!
  9. அறிமுகமாகிறது Samsung Galaxy M36 5G: Orange Haze, Serene Green கலர் ஆப்ஷன்களுடன் மாஸ் எண்ட்ரி!
  10. அறிமுகமானது OnePlus Bullets Wireless Z3: 10 நிமிடம் சார்ஜ், 27 மணிநேரம் மியூசிக்! மிஸ் பண்ணாதீங்க!
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.