Photo Credit: Samsung
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Samsung Galaxy M15 5G Prime Edition பற்றி தான்.
அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் அம்சங்கள் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட Galaxy M15 5G போலவே உள்ளது. ஸ்மார்ட்போன் மீடியா டெக் டைமன்சிட்டி 6100+ SoC சிப்செட்,8GB வரை ரேம் மற்றும் 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. 50 மெகாபிக்சல் டிரிபிள் ரியர் கேமரா யூனிட் மற்றும் 13 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டரைக் கொண்டுள்ளது.
Samsung Galaxy M15 5G Prime Edition இந்தியாவில் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல் ஆரம்ப விலை ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடல்கள் முறையே ரூ. 11,999 மற்றும் ரூ. 13,499 என்கிற விலைக்கு கிடைக்கிறது. அமேசான் , சாம்சங் இந்தியா இணையதளம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரீடெய்ல் ஸ்டோர்களில் இந்த போன் வாங்கலாம். ப்ளூ டோபஸ், செலஸ்டியல் ப்ளூ மற்றும் ஸ்டோன் கிரே வண்ணங்களில் வருகிறது.
Samsung Galaxy M15 5G Prime Edition ஆனது 6.5-inch full-HD+ (1,080 x 2,340 pixels) Super AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் இருக்கும். MediaTek Dimensity 6100+ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 8GB வரை ரேம் மற்றும் 128GB வரை மெமரியுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான One UI 6.0 OS இதில் இருக்கிறது. நான்கு OS அப்டேட் மற்றும் ஐந்து வருட பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரையில், Samsung Galaxy M15 5G Prime Edition ஆனது 5 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார் கேமரா உடன் 50 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்ட மூன்று பின்புற கேமரா யூனிட்டை கொண்டுள்ளது. முன் கேமராவில் 13 மெகாபிக்சல் சென்சார் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி பிரைம் செல்போன் 6,000எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. பாதுகாப்பிற்காக, இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ளது. தொலைபேசியில் நாக்ஸ் செக்யூரிட்டி மற்றும் குயிக் ஷேர் அம்சங்கள் மற்றும் அழைப்பு தெளிவாக கேட்க வாய்ஸ் ஃபோகஸ் ஆகியவை உள்ளன. இணைப்பு விருப்பங்களில் டூயல் 5ஜி, 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், புளூடூத் 5.3, யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை உள்ளது. இந்த செல்போன் 217 கிராம் எடை கொண்டது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்