சாம்சங் நிறுவனமானது தனது முதல் M சிரிஸ் வகை போன்களை இந்தியாவில் வரும் ஜன.28ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது. இதில் 10,000 முதல் 15,000 விலையில் அடங்கும் என ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திடம் சாம்சங் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களானது அமேசான்.இன் மற்றும் சாம்சங் ஆன்லைன்களிலும் கிடைக்கிறது.
சாம்சங் கேலக்ஸி m10 விலையானது ரூ.7,990ஆகும் சாம்சங் கேலக்ஸி m20 விலையானது ரூ.10,990 முதல் கிடைக்கிறது. இந்தியாவிலே முதல்முறையாக m சிரிஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியாகிறது. இந்த போன்கள் இன்பினிட்டி வி டிஸ்பிளே, அதிக திறன் கொண்ட பேட்டரிகள் கொண்டுள்ளது. வரும் ஜன.28ஆம் தேதி அறிமுகம் ஆகும் இந்த போன் வரும் பிப்.5 முதல் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி m20 போனில் 5,000mAh பேட்டரி திறனும், சாம்சங் கேலக்ஸி m10 போனில் 3,500mAh பேட்டரி திறனும் கொண்டுள்ளது.
மேலும் இந்த போன்கள், 6.2இன்ச் எச்டி+(720x1520 பிக்செல்ஸ்) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்தி போன்களில் 14nm ஆக்டா-கோர் எக்சினோஸ் பிராசஸருடன் 2ஜிபி or 3ஜிபி ரேம் கொண்டுள்ளது.
டூயல் கேமரா செட்-ஆப் கொண்ட கேலக்ஸி m10 போனில் 13 மெகா பிக்செல்ஸ் பிரைமரி சென்சார் 5 மெகா பிக்செல்ஸ் செகண்டரி சென்சார் கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி m10 ஆண்டிராய்டு 8.1 ஓரியோ 7.7mm அளவில் 160 கிராம் எடை கொண்டுள்ளது.
ary
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்