Photo Credit: Samsung
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Samsung Galaxy F05 செல்போன் பற்றி தான்.
இந்திய மார்க்கெட்டை மிரளவிட போகும், ஒரு அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடலாக இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. M சீரிஸ் வரிசை ஸ்மார்ட்போனில் உள்ள அதே அம்சங்களுடன் லெதர் பினிஷ் உடன் F05 மாடல் வெளிவந்துள்ளது.
Samsung Galaxy F05 செவ்வாய் அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட், 4ஜிபி ரேம் உடன் வருகிறது. இது 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது. 5,000mAh பேட்டரி மூலம் இயங்குகிறது. 6.7 இன்ச் HD+ திரை மற்றும் 8 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டருடன் 50 மெகாபிக்சல் இரட்டை பின்புற கேமரா யூனிட் உள்ளது. ரீபேட்ஜ் செய்யப்பட்ட Samsung Galaxy M05 அல்லது Samsung Galaxy A05 போல தெரிகிறது.
இந்தியாவில் Samsung Galaxy F05 விலை 4GBரேம் 64GB மெமரி மாடல் 7,999 என்கிற விலைக்கு விற்பனைக்கு வருகிறது. இது செப்டம்பர் 20 முதல் பிளிப்கார்ட், சாம்சங் இந்தியா இணையதளம் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஃப்லைன் சில்லறை விற்பனைக் கடைகளில் கிடைக்கும். இந்த போன் ட்விலைட் ப்ளூ நிறத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
Samsung Galaxy F05 6.7 இன்ச் HD+ திரையைக் கொண்டுள்ளது. இது MediaTek Helio G85 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரியை கொண்டுள்ளது. கூடுதலாக 4ஜிபி வரை ரேம் விரிவாக்கத்தையும், மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை மெமரி விரிவாக்கத்தையும்சப்போர்ட் செய்கிறது. இது ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான One UI 5 உடன் வந்துள்ளது. இரண்டு OS அப்டேட் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு அப்டேட் கிடைக்கும் என சாம்சங் நிறுவனம் உறுதிப்படுத்தியது.
கேமரா பொறுத்தவரையில் Samsung Galaxy F05 ஆனது இரட்டை பின்புற கேமரா யூனிட்டைக் கொண்டுள்ளது. இதில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கேமரா அடங்கும். இது 8 மெகாபிக்சல் முன் பக்க கேமராவை கொண்டுள்ளது.
USB Type-C போர்ட் வழியாக 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது. 5,000mAh பேட்டரி உள்ளது. பாதுகாப்பிற்காக ஃபேஸ் அன்லாக் அம்சத்துடன் வருகிறது. பின்புற பேனலில் லெதர் பினிஷை கொண்டுள்ளது. பக்கவாட்டில் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனரை கொண்டுள்ளது. டூயல் 4ஜி VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.3 மற்றும் USB Type-C சப்போர்ட் செய்கிறது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்