Photo Credit: SamMobile
ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை 2019-ஆம் ஆண்டின் இறுதிக்குள் வெளியிடுவதற்கு உறுதியளித்த பல பிராண்டுகளில் சாம்சங் ஒன்றாகும். ஆண்ட்ராய்டு 10-அடிப்படையிலான One UI 2.0-க்கான பீட்டா நிரல் முழு வீச்சில் இருக்கும்போது, இஸ்ரேலில் சாம்சங் வெளியிட்டுள்ள வெளியீட்டு அட்டவணை, நிறுவனம் தனது ஸ்மார்ட்போன்களுக்கான நிலையான ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டை அடுத்த ஆண்டு ஜனவரியில் மட்டுமே தொடங்கும் என்று தெரிவிக்கிறது. 2020 ஜனவரியில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டைப் பெறும் முதல் போன்களில் Galaxy Note 10 மற்றும் Galaxy S10 சீரிஸ் மாடல்கள் ஆகும்.
ஆண்ட்ராய்டு 10 அப்டேட் சாலை வரைபடம் (roadmap) சாம்மொபைலால் (SamMobile) கண்டுபிடிக்கப்பட்டது. இது இஸ்ரேலில் உள்ள சாம்சங் உறுப்பினர்கள் செயலியில் (Samsung Members app) வெளியிடப்பட்டது. இது இஸ்ரேலில் மட்டுமே பின்பற்றப்படும் ரோல்அவுட் அட்டவணையாக இருக்கும் என்றும், இது எல்லா பிராந்தியங்களிலும் உள்ள சாம்சங் தொலைபேசி பயனர்களுக்கு பொருந்தாது என்றும் கூறுகிறது. ஆண்ட்ராய்டு 10 அப்டேடைப் பெறும் முதல் போன்கள் Galaxy S10e, Galaxy S10, Galaxy S10+, Galaxy Note 10, Galaxy Note 10+, Galaxy Note 9 மற்றும் Galaxy A30ஆகும். மேற்கூறிய போன்கள் ஜனவரி மாதத்தில் ஆண்ட்ராய்டு 10-க்கு மேம்படுத்தப்படும்.
Samsung Galaxy S9 மற்றும் Galaxy S9+ ஆகியவை ஏப்ரல் மாதத்தில் நிலையான ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டைப் பெறும். ஒரே மாதத்தில் நான்கு Galaxy A-சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டையும் சாம்சங் வெளியிடும், அவற்றில் Galaxy A7 (2018), Galaxy A9 (2018), Galaxy A50 மற்றும் Galaxy A70 ஆகியவை அடங்கும். flagship Galaxy Tab S6-ம் ஏப்ரல் மாதத்தில் ஆண்ட்ராய்டு 10-க்கு மேம்படுத்தப்படும். Galaxy A30s, Galaxy A20, Galaxy A10 மற்றும் Galaxy A10s-க்கான ஆண்ட்ராய்டு 10 அப்டேட் அடுத்த ஆண்டு மே மாதத்தில் வெளியிடப்படும்.
2020 முதல் பாதியில் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டைப் பெறும் மற்ற இரண்டு ஸ்மார்ட்போன்கள் Galaxy J6 மற்றும் Galaxy A20s ஆகும். Galaxy Tab S5e, Galaxy Tab S4 10.5 மற்றும் Galaxy J6+ ஆகியவை ஜூலை 2020 முதல் ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டைப் பெறும். மேற்கூறிய ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வெளியீட்டு அட்டவணை, இஸ்ரேலில் உள்ள சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே, என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்