அதிரடி விலைக் குறைப்பில் Samsung Galaxy A70s!

விளம்பரம்
Written by Kathiravan Gunasekaran மேம்படுத்தப்பட்டது: 6 பிப்ரவரி 2020 11:00 IST
ஹைலைட்ஸ்
  • Galaxy A70s-ன் திருத்தப்பட்ட விலை ஆன்லைன் ஸ்டோர்களில் பிரதிபலிக்கிறது
  • இந்த போன் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது
  • Samsung Galaxy A70s, Qualcomm Snapdragon 675 SoC உடன் வருகிறது

Samsung Galaxy A70s-ன் விலை குறைப்பு, இந்தியாவில் Galaxy A71 அறிமுகத்தின் ஒரு குறிப்பாக இருக்கலாம்

இந்தியாவில் Samsung Galaxy A70s-ன் விலை ரூ.3,000 குறைக்கப்பட்டுள்ளது. நாட்டில் Galaxy A71 அறிமுகமாகிறது என்ற வதந்திகளுக்கு மத்தியில் புதிய விலை வீழ்ச்சி வருகிறது. Galaxy A70s கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.


இந்தியாவில் Samsung Galaxy A70s-ன் விலை:

இந்தியாவில் Samsung Galaxy A70s-ன் 6GB RAM + 128GB ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ. 28,999-யில் இருந்து ரூ. 25,999-யாக குறைக்கப்பட்டுள்ளது. இது Samsung India online store-ல் பிரதிபலிக்கும். Galaxy A70s-ன் 8GB RAM + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையும் ரூ. 27,999-யாக குறைக்கப்பட்டுள்ளது. இது ரூ. 30,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோருக்கு கூடுதலாக, Amazon மற்றும் Flipkart நிறுவனங்களும் புதிய விலைகளைக் காட்டுகின்றன.

கேஜெட்ஸ் 360, விலைக் குறைப்பு குறித்த தெளிவுக்காக சாம்சங் இந்தியாவுக்கு எழுதியுள்ளது, மேலும் நிறுவனம் பதிலளிக்கும் போது இந்த இடத்தை புதுப்பிக்கும்.


Samsung Galaxy A70s-ன் விவரக்குறிப்புகள், சிறப்பம்சங்கள்:

டூயல்-சின் (நானோ) Samsung Galaxy A70s, One UI உடன் Android 9 Pie-ல் இயங்குகிறது. இது 20:9 aspect ratio உடன் 6.7-inch full-HD+ (1080x2400 pixels) Super AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த போன் 6GB மற்றும் 8GB RAM ஆப்ஷனுடன் இணைக்கப்பட்டு Qualcomm Snapdragon 675 SoC-யால் இயக்கப்படுகிறது. போனின் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பில் f/1.8 lens 64-மெகாபிக்சல் முதன்மை சென்சார், ultra-wide-angle lens உடன் 8-மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 5-மெகாபிக்சல் மூன்றாம் நிலை சென்சார் ஆகியவை அடங்கும். இந்த போன் முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் செல்பி கேமராவையும் கொண்டுள்ளது.

Samsung, 128GB ஆன்போர்டு ஸ்டோரேஜை Galaxy A70s-க்கு வழங்குகிறது. இதனை microSD card வழியாக (512GB வரை) விரிவாக்கம் செய்யலாம். போனின் இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS மற்றும் USB Type-C port ஆகியவை அடங்கும். இதில் in-display fingerprint சென்சாரும் உள்ளது. தவிர, இந்த போன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

 

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. iPhone 17e வருது! பட்ஜெட் ஐபோன்ல இப்போ மேக்சேஃப் சப்போர்ட்.. சிங்கிள் கேமராவோட தரமான சம்பவம் பண்ணப்போற ஆப்பிள்
  2. சாம்சங், ஐபோனுக்கே டஃப் கொடுக்க ஷாவ்மி ரெடி! Xiaomi 17 Ultra-வோட குளோபல் ரெண்டர்ஸ் லீக்.. அந்த 200MP ஜூம் வேற லெவல்
  3. பிக்சல் 10ஏ-ல இவ்வளவு சூப்பர் கலர்ஸா? லீக்கான 4 மாஸ் கலர்கள் இதோ! பிப்ரவரி 18-க்காக வெயிட்டிங்
  4. கனவு விலையில் Vivo V50 5G! Flipkart-ல் மெகா டிஸ்கவுண்ட்.. 6000mAh பேட்டரி, Zeiss கேமரா இப்போ இவ்வளவு கம்மி விலையிலா?
  5. இனி பிளாக்ஷிப் போன் பட்ஜெட் விலையில்! Samsung Galaxy S24 FE இப்போ Amazon-ல் செம சீப்.. மிஸ் பண்ணிடாதீங்க
  6. ஸ்மார்ட்போன் ஹிஸ்டரிலயே இப்படி ஒரு பேட்டரியா? 7,400mAh உடன் மிரட்டும் iQOO 15 Ultra! கேமர்களுக்கு இதுதான் இனி ஒரே சாய்ஸ்
  7. பிக்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்! Google Pixel 10a எப்போ வருது தெரியுமா? டிசைன் மற்றும் கலர் டீசர் ரிலீஸ்
  8. விவோவோட அடுத்த தரமான போன் ரெடி! Geekbench-ல் மிரட்டும் Vivo V70 Elite.. பட்ஜெட்ல ஒரு பிளாக்ஷிப் போனா?
  9. விலை குறைந்தது OnePlus 13! பிளிப்கார்ட்டில் ரூ.12,000 வரை சேமிக்க ஒரு சூப்பர் வாய்ப்பு. ஆஃபரை எப்படி பெறுவது?
  10. S26 Ultra-வோட புது கலர்ஸ் பார்த்தீங்களா? சாம்சங் ரசிகர்களுக்குப் பிடிச்ச அந்த ஒரு கலர் திரும்ப வருது! டிசைன்லயும் பெரிய மாற்றம்
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2026. All rights reserved.