ஸ்மார்ட்போன்களின் விற்பனை திங்கள்கிழமை முதல் ஆன்லைனில் தொடங்கியுள்ளது. ரெட்மி நோட் 9 ப்ரோ செவ்வாயன்று மீண்டும் ஃபிளாஷ் விற்பனையில் கிடைக்கும். இந்த போனை அமேசான்.இன் மற்றும் எம்ஐ.காமில் இருந்து இன்று நண்பகல் 12 மணிக்கு ஆர்டர் செய்யலாம்.
இப்போதைக்கு, பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலத்தில் மட்டுமே விநியோகம் இருக்கும். அனைத்து வகையான இ-காமர்ஸ் விநியோகமும் சிவப்பு மண்டலத்தில் மூடப்பட்டுள்ளது. நீங்கள் சிவப்பு மண்டலத்தில் இருந்தால் செவ்வாய்க்கிழமை ஃபிளாஷ் விற்பனையில் நீங்கள் பங்கேற்க முடியாது.
இன்றைய விற்பனை குறித்த அறிவிப்பை, ஷாவ்மி இந்தியா தலைவர் மனு குமார் ஜெயின் திங்களன்று ட்விட்டரில் வெளியிட்டார்.
BOOOOM! :boom: The ULTIMATE #PerformanceBeast! :facepunch: #RedmiNote9Pro- is going on sale tomorrow (5th May) @ 12 noon! :clock12:
— Manu Kumar Jain (@manukumarjain) May 4, 2020
Mi Fans, get ready to get yours via https://t.co/pMj1r7lwp8 & @amazonIN! Get additional ₹1000 off on @ICICIBank Credit cards & EMI. :the_horns: pic.twitter.com/784CDqBP9l
இந்த போன் ரூ.12,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், ஏப்ரல் மாதத்தில் ஸ்மார்ட்போன்களுக்கான தயாரிப்பு சேவை வரியை 12 சதவீதம் முதல் 18 சதவீதம் வரை உயர்த்தியதால், ஷாவ்மி போனின் விலையை ரூ.1,000 உயர்த்தியுள்ளது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 9 ப்ரோவின் விலை ரூ.13,999 ஆகும்.
போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜின் விலை ரூ.16,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் நீலம், வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கும். Amazon.in மற்றும் மி.காமில் இருந்து மதியம் 12 மணிக்கு விற்பனை தொடங்கும். ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி இந்த போனை ஈ.எம்.ஐ.யில் வாங்கினால், உங்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும்.
டூயல்-சிம் Redmi Note 9 Pro நிறுவனத்தின் MIUI 11 உடன் Android 10-ல் இயக்கும். இந்த போனில் 6.67 இன்ச் எஃப்.எச்.டி + டிஸ்ப்ளே உள்ளது. போனின் உள்ளே Qualcomm's ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட், 6 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம் மற்றும் 128 ஜிபி வரை யுஎஃப்எஸ் 2.1 ஸ்டோரேஜ் உள்ளது.
இந்த போனின் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் உள்ளன. முதன்மை கேமராவில் 48 மெகாபிக்சல் சென்சார் உள்ளது. 8 மெகாபிக்சல் வைவ்-ஆங்கிள் கேமரா, 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றுடன் வருகிறது. செல்பி எடுக்க 16 மெகாபிக்சல் கேமரா உள்ளது. இந்த போனின் உள்ளே, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் உதவியுடன் 5,020 எம்ஏஎச் பேட்டரி உள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்