6ஜபி, 8ஜிபி ரேம் வேரியண்டில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மீண்டும் விற்பனையில்!

விளம்பரம்
மேம்படுத்தப்பட்டது: 9 ஜூலை 2020 11:48 IST
ஹைலைட்ஸ்
  • Redmi Note 9 Pro Max was launched in India in March
  • It carries quad rear cameras and a single selfie camera
  • Redmi Note 9 Pro Max houses a 5,020mAh battery

6ஜபி, 8ஜிபி ரேம் வேரியண்டில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் மீண்டும் விற்பனையில்!

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் இந்தியாவில் இன்று நண்பகல் முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த போன் மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, இப்போது பல ஃபிளாஷ் விற்பனைகளுக்கு பின்னர் இது மீண்டும் அமேசான் மற்றும் சியோமி இந்தியா தளங்களின் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது. ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் குவாட் ரியர் கேமராக்கள், 32 மெகாபிக்சல் முன் கேமரா மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி சோசி ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வேகமான சார்ஜிங் ஆதரவையும் கொண்டிருக்கிறது. 

இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் விலை, சலுகைகள்

இந்தியாவில் ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் 6ஜிபி + 64ஜிபி வேரியண்டின் விலை ரூ.16,999 ஆகும்.  6ஜிபி ரேம்/128ஜிபி வேரியண்ட் மாடலின் விலை ரூ.18,499 ஆகும். இரண்டு வகைகளும் அமேசான்.இன் மற்றும் எம்ஐ தளத்தில் விற்பனையில் உள்ளன. 

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸின் 8ஜிபி ரேம்/128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டையும் வாடிக்கையாளர்கள் எம்.ஐ தளத்தில் ரூ.19,999ல் பெற்றுக்கொள்ளலாம்.

இதில், ஏர்டெல் டபுள் டேட்டா பலனாக ரூ.298 மற்றும் ரூ.398 மதிப்பிலான அன்லிமிடெட் பேக்குகள் ஆஃபராக வழங்கப்பட்டுள்ளது. அமேசான் வழியாக போனை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் விலையில்லா இஎம்ஐ ஆப்ஷன்களையும் தேர்ந்தெடுக்கலாம். 

ரெட்மி 9 ப்ரோ மேக்ஸ் சிறப்பம்சங்கள்

ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் 6.67 அங்குல முழு எச்டி+(1,080x2,400பிக்சல்கள்) ஐபிஎஸ் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி SoCல் இயக்கப்படுகிறது, இதில் 8ஜிபி ரேம் வரை இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்.டி கார்டு (512 ஜிபி வரை) வழியாக விரிவாக்கக்கூடிய 128 ஜிபி உள் சேமிப்பிடத்தையும் இந்த போன் கொண்டுள்ளது. 

ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸில் குவாட் ரியர் கேமரா அமைப்பில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸுடன் 8 மெகாபிக்சல்சென்சார், மேக்ரோ லென்ஸுடன் 5 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஆகியவை உள்ளன. செல்பி மற்றும் வீடியோ அழைப்பிற்காக, சியோமி துணை பிராண்ட் ரெட்மி 32 மெகாபிக்சல் முன் கேமராவை வழங்கியுள்ளது.

பேட்டரியைப் பொறுத்தவரை, ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் 5,020 எம்ஏஎச் உடன் 33W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது. இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாருடன் வருகிறது. தொலைபேசியில் இணைப்பு விருப்பங்களில் 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் வி 5.0, அகச்சிவப்பு (ஐஆர்), யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது..


Why do Indians love Xiaomi TVs so much? We discussed this on Orbital, our weekly technology podcast, which you can subscribe to via Apple Podcasts, Google Podcasts, or RSS, download the episode, or just hit the play button below.

 
REVIEW
  • Design
  • Display
  • Software
  • Performance
  • Battery Life
  • Camera
  • Value for Money
  • Good
  • Powerful processor
  • Bundled fast charger
  • All-day battery life
  • Good cameras
  • Bad
  • Big and bulky
  • Preinstalled bloatware
  • Average low-light video recording
 
KEY SPECS
Display 6.67-inch
Processor Qualcomm Snapdragon 720G
Front Camera 32-megapixel
Rear Camera 64-megapixel + 8-megapixel + 5-megapixel + 2-megapixel
RAM 6GB
Storage 64GB
Battery Capacity 5020mAh
OS Android 10
Resolution 1080x2400 pixels
NEWS
VARIANTS

புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

Advertisement
Popular Brands
#சமீபத்திய செய்திகள்
  1. S25 Ultra: கேமரா, பேட்டரி, AI அம்சங்களுடன் மலிவான விலையில்! மிஸ் பண்ணிடாதீங்க!
  2. Dimensity 7060 சிப்செட்டுடன் Lava Storm Play 5G: கேமர்கள், பட்ஜெட் 5G-க்கு ரெடியா?
  3. கலக்கும் Realme C71: 50MP கேமரா, நீண்ட நேரம் தாங்கும் பேட்டரி - வேற லெவல் போன்
  4. Nothing-ன் புது அவதாரம்! Phone 3, Headphone 1: மாஸ் லான்ச்சுக்கு ரெடியாகுங்க
  5. பார்த்துட்டீங்களா! Vivo T4 Ultra-வோட பெரிய ஜூம் லென்ஸ் கேமரா அட்ராசிட்டி! இதோட அம்சங்கள் வேற லெவல்!
  6. iQOO Neo 10: விலை குறைவு, ஆனால் அசத்தலான அம்சங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க!
  7. Realme GT 7, GT 7T: பவர்ஃபுல் சிப், 120W சார்ஜிங்குடன் இந்திய மார்க்கெட்ல - மிஸ் பண்ணாதீங்க!
  8. ஏர்டெல் புது பிளான்ஸ்: ஓடிடி பிரியர்களுக்கு ஜாக்பாட்! விலை, டேட்டா, முழு விவரம் இதோ!
  9. ஸ்டார்லிங்க் இந்தியாவில் அறிமுகம்: அன்லிமிடெட் டேட்டா, விலை மற்றும் ஸ்பெஷல் ஆஃபர்ஸ்
  10. Vivo T4 Ultra: Dimensity 9300 சிப், பெரிஸ்கோப் கேமரா - ரிலீஸ் தேதி கசிந்தது
Download Our Apps
Available in Hindi
© Copyright Red Pixels Ventures Limited 2025. All rights reserved.