Photo Credit: SlashLeaks
சில நாட்கள் முன்பு, ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் குறித்த சில தகவல்கள் இணையத்தில் வெளியாகியிருந்தது. அதன்படி, சியோமியின் துணை நிறுவனத்தை சேர்ந்த இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் கேமராவுடன் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. தற்போது, இந்த ஸ்மார்ட்போனின் சிற்ப்பம்சங்கள் குறித்த மேலும் சில தகவல்களை சியோமி நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் வெளியிட்டிருக்கிறார். அதிக திரை-உடல் விகிதம், முந்தைய ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடுகையில் அதிக பேட்டரி அளவு, அனைத்திற்கும் மேலாக அதிக புகைப்படத் தரம் என அனைத்து சிறப்பம்சங்களும் இதில் அடங்கும். அனைத்திற்கும் மேலாக கருப்பு நிற வண்ணத்திலான இந்த ஸ்மார்ட்போனின் இரண்டு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
முதலாவதாக இந்த ஸ்மார்ட்போனின் கேமராக்கள், இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்டுள்ளது என்பதுதான். முன்னதாக் லூ வெய்பிங் இந்த புதிய ரெட்மீ ஸ்மார்ட்போன் 4 பின்புற கேமராக்களுடன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டிருக்கும் என ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும், இந்த கேமரா சென்சார் சாம்சங் ஐசோசெல் ப்ரைட் GW1 சென்சாராக இருக்குமா என்ற தகவலை சியோமி நிறுவனம் சமீபத்தில்தான் உறுதி செய்திருந்தது.
கூடுதலாக ரெட்மியின் நிர்வாக இயக்குனர், இந்த ஸ்மார்ட்போன் நீடித்த பேட்டரி அளவை கொண்டிருக்கும் என குறிப்பிட்டிருந்தார். அதன்படி, முந்தைய ஸ்மார்ட்போன்களில் உள்ள 4000mAh பேட்டரியை விட அதிக அளவு பேட்டரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ரெடீ நோட் 7-ஐ விட அதிக திரை- உடல் விகிதம் கொண்டிருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இந்த ஸ்மார்ட்போன் சிறிய நாட்ச் டிஸ்ப்ளே அல்லது முழு திரையுடன் பாப்-அப் செல்பி கேமரா கொண்டு அறிமுகமாகலாம்.
ஆகஸ்ட் 29 அன்று சீனாவில் அறிமுகமாகவுள்ள இந்த ஸ்மார்ட்போனுடன், வெய்பிங் ஒரு 70-இன்ச் டிவியும் அறிமுகமாகும் என்பதை உறுதி செய்துள்ளார். அந்த டிவிக்கான டீசரும் வெளியாகியுள்ளது.
இதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த ஸ்மார்ட்போன் 3.5mm ஆடியோ ஜாக், டைப்-C சார்ஜர் ஆகியவற்றை கொண்டிருக்கும் என்பது உறுதியாகியுள்ளது.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்