Photo Credit: Redmi
நீங்கள் பட்ஜெட் விலையில் புதிதாக ஸ்மார்ட்போன், வாட்ச், ஸ்பீக்கர் உட்பட எது வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றாலும் இந்த பதிவு உங்களுக்கானது மக்களே. நீங்கள் எதிர்பார்க்கும் விலைக்குள் எந்த ஸ்மார்ட்போன் சிறந்தது? எந்த போன் சிறந்த பெர்பார்மென்ஸை கொண்டுள்ளது? எந்த போனில் கேமரா அம்சம் மிரட்டலாக இருக்கிறது? எந்த போனில் டிஸ்பிளே சூப்பராக அமைந்துள்ளது? எது பட்ஜெட்டில் சூப்பர் போன்? என்பது போன்ற விபரங்களை நாங்கள் உங்களுக்கு விளாவாரியாக சொல்லப்போகிறோம். இப்போ நாம் பார்க்க இருப்பது Redmi 14R செல்போன் பற்றி தான்.
Redmi 14R ஆனது சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. Snapdragon 4 Gen 2 சிப்செட் மூலம் இது இயக்கப்படுகிறது. 8GB வரை ரேம் மற்றும் 256GB வரை மெமரி கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14ல் இயங்குகிறது. சியோமியின் ஹைப்பர்ஓஎஸ் ஸ்கின் உடன் வருகிறது. இது 18W சார்ஜிங்கிற்கான சப்போர்ட் உடன் 5,160mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. Redmi 13R செல்போன் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் வருகிறது.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரியுடன் கூடிய Redmi 14R விலை தோராயமாக ரூ. 13,000ல் தொடங்குகிறது . 6GB+128GB மற்றும் 8GB+128GB முறையே தோராயமாக ரூ. 17,700 மற்றும் ரூ. 20,100 விலையில் கிடைக்கிறது. மற்றொரு 8GB+256GB மாடல் விலை தோராயமாக ரூ. 22,500 என்கிற விலையில் கிடைக்கும்.
Redmi 14R டீப் ஓஷன் ப்ளூ, லாவெண்டர், ஆலிவ் கிரீன் மற்றும் ஷேடோ பிளாக் வண்ணங்களில் இப்போது சீனாவில் கிடைக்கிறது. இந்தியா உட்பட உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படுமா என்பது குறித்து தற்போது எந்த தகவலும் இல்லை.
Redmi 14R ஆனது இரட்டை சிம் (நானோ) கொண்டுள்ளது. Android 14-அடிப்படையிலான HyperOSல் இயங்குகிறது. இது 6.68-இன்ச் HD+ LCD திரையை கொண்டுள்ளது. இது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 600nits உச்ச பிரகாசத்துடன் கொண்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 4 ஜெனரல் 2 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, இது 8ஜிபி வரை ரேம் கொண்டுள்ளது. 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக முன்பக்கத்தில் வாட்டர் டிராப் பாணியில் 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
Redmi 14R 256GB வரை உள்ளடங்கிய மெமரியை கொண்டுள்ளது. 5G, 4G LTE, Wi-Fi, ப்ளூடூத், GPS, USB Type-C போர்ட் மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகிய வசதிகள் உள்ளது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. Redmi 14R ஆனது 18W சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,160mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. நீண்ட நேரம் பேட்டரி தாங்கும். இப்போதைக்கு சீனாவில் உள்ள நிறுவனத்தின் இணையதளத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நிறுவனத்தின் தரப்பில் எந்தவித தகவலும் இது குறித்து பகிரப்படவில்லை.
புதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
விளம்பரம்
விளம்பரம்